தேர்தல் கமிஷனே பாலிடிக்ஸ் செய்கிறதா?
சென்னை:
3 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செங்கை சிவத்தின் மனுக்களை ஏற்றுக் கொண்டதன்மூலம் தேர்தல் கமிஷன் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த தேர்தலில் ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தபோது அனைத்து மனுக்களையும்தள்ளுபடி செய்தது தேர்தல் கமிஷன். இதற்கு அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி தான் காரணம் ஜெயலலிதாபிரச்சாரம் செய்ய வெறுத்துப் போனது திமுக. அதை மறுத்து எவ்வளவோ பிரச்சாரம் செய்தும் எடுபடவில்லை.
இன்றும் அந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது கூறி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதனால், இந்தக்குற்றச்சாட்டை தவறு என்று நிரூபிக்க திமுகவின் முக்கிய புள்ளியான செங்கை சிவத்தை மூன்று தொகுதிகளிலும்நிறுத்தினார் கருணாநிதி.
சைதாப்பேட்டை, வாணியம்பாடியில் ஒரிஜினல் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இவரும்நிறுத்தப்பட்டார். அச்சிறுப்பாக்கத்தில் கூட்டணிக் கட்சியியான பா.ம.கவின் வேட்பாளரான பார்வேந்தன்போட்யிட்ட நிலையில் செங்கை சிவம் அங்கும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நீண்ட காலத்துக்குப் பின் கடந்த வாரம் தன்னை வீட்டில் வந்து சந்தித்த பா.ம.க. தலைவர் ராமதாசிடம் செங்கைசிவத்தை நிறுத்துவதற்கான காரணத்தை கருணாநிதி விளக்கிவிட்டார். இதனால் செங்கை சிவம் போட்டியிட்டதைபா.ம.க. பிரச்சனையாக்கவில்லை.
ஆனால், பிரச்சனை தேர்தல் கமிஷன் ரூபத்தில் வந்தது. 3 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்ட செங்கை சிவத்தின்மனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்திருக்க வேண்டும். ஜெயலலிதா விஷயத்தில் அதைத் தான் கமிஷன் செய்தது.
ஆனால், செங்கை சிவத்தின் வேட்பு மனுவை அச்சிறுப்பாக்கத்தில் மட்டும் தள்ளுபடி செய்தது. ஆனால்,எந்தவிதமான எதிர்பபும் இன்றி சைதாப்பேட்டையில் ஏற்றுக் கொண்டது. அதே போல வாணியம்பாடியில் முதலில்நிராகரிப்பதாக கூறிவிட்டு பின்னர் ஏற்றுக் கொண்டது.
இதனால் திமுகவின் திட்டங்கள் தவிடுபொடியாகிவிட மக்கள் மத்தியிலும் தேர்தல் கமிஷன் குறித்து பல்வேறுசந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
கமிஷன் விளக்கம்:
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் தந்த விளக்கம் இதோ:
1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டசத்தின் படி எந்த ஒரு வேட்பாளரும் இரண்டு தொகுதிகளுக்கு மேல்வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடியாது.
இந்தியத் தேர்தல் கமிஷன் 2001ம் ஆண்டு ஏப்ரலில் அனுப்பியுள்ள விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் இருதொகுதிகளுக்கு மேல் மனு செய்திருந்தால், அவருடைய முதல் இரண்டு மனுக்களும் பரிசீலனை செய்யப்படும்.மூன்றாவது மற்றும் அதற்கும் மேற்பட்ட மனுக்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யப்படும்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் 4தொகுதிகளிலுமே நிராகரிக்கப்பட்டன. புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா 3வதுமற்றும் 4வதாக மனுக்களைத் தாக்கல் செய்தார். எனவே அவை இரண்டும் ஆரம்பத்திலேயே தள்ளுபடிசெய்யப்பட்டன.
ஆனால் ஜெயலலிதாவின் முதல் 2 மனுக்களும் (கிருஷ்ணகிரி மற்றும் ஆண்டிப்பட்டி) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பரிசீலனையில் அவர் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர் என்றுதெரியவந்ததால் அந்த அடிப்படையில் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜெயலலிதாவின் முதல் இரு மனுக்கள் தள்ளுபடியாகக் காரணம் வழக்குகளும், சிறை தண்டனையும் தான்.
செங்கை சிவத்தைப் பொறுத்தவரை அவரது 3வது மனு (அச்சிறுப்பாக்கம்) ஆரம்பத்திலேயே தள்ளுபடிசெய்யப்பட்டது. அவரது முதல் இரு மனுக்களும் (சைதாப்பேட்டை, வாணியம்பாடி) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர் மீது வழக்குகளோ, அல்லது சிறை தண்டனை போன்ற விவகாரங்கேளா இல்லாததால்அந்த இரு மனுக்களும் ஏற்கப்பட்டன.
வாணியம்பாடியில் முதலில் நிராகரித்துவிட்டு பின்னர் ஏற்றுக் கொண்டதற்கு அந்தத் தொகுதி தேர்தல் அதிகாரியின்சிறிய தவறே காரணம்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் கமிஷ்னர் அறிக்கை:
வாணியம்பாடியில் நடந்த குழப்பம் குறித்து தமிழக தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்ஜய் சாரங்கி வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
வாணிம்பாடி தேர்தல் அதிகாரி செங்கை சிவத்தின் மனுவைப் பரிசீலனை செய்யும்போது, அவர் மூன்றுதொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார் என்ற காரணத்தின் அடிப்படையில் அதை நிராகரித்தார்.
ஆனால் வாணியம்பாடி தேர்தல் அதிகாரியின் இந்த முடிவு தவறானது என்பதால் செங்கை சிவத்தின் மனுவைமீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அவருக்கு ஆணையிடப்பட்டது.
இதையடுத்து செங்கை சிவத்தின் வேட்பு மனுவை மீண்டும் மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார். விதிகளுக்குஉட்பட்டே அந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததால் செங்கை சிவத்தின் மனுவை அந்தத் தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார் என்று அறிக்கையில் சாரங்கி கூறியுள்ளார்.
மிரட்டிட்டாங்க சார்...
இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாசிடம் நிருபர்கள் கேட்டபோது,
வாணியம்பாடியில் மனு பரிசீலனை நடந்த அறையில் பலரும் சத்தம் போட்டு குழப்பமாக இருந்ததால் தன்னைவிட்டால் போதும் என்று தேர்தல் அதிகாரி எதையோ சொல்ல வேண்டும் என்பதற்காக மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று முதலில் அறிவித்து விட்டார்.
மேலும் அங்கிருந்த அரசியல்வாதிகள் சிலர் மிரட்டியதாலும் அவர் முதலில் அவ்வாறு அறிவித்து விட்டார். ஆனால்எழுத்து பூர்வமாக எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடப்படவில்லையே என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications