சைதை வாக்காளர்களே, சரித்திரம் படைத்திடுங்கள் !
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை தேர்வு செய்து தமிழக அரசியலில் சாதனை படைத்திடுங்கள் என்று சைதாப்பேட்டைவாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா அழைப்பு விடுத்துள்ளார்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் நந்தகோபால் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சங்கரய்யா, கட்சியின் மாநிலசெயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் சைதை பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினர்.
சங்கரய்யா பேசுகையில், திராவிடக் கட்சிகளுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்க இந்த இடைத் தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
திமுகவும் சரி, அதிகவும் சரி இரண்டுமே மக்களுக்கு நல்லது செய்யவில்லை. இரண்டு கட்சிகளுமே மாறி, மாறி பா.ஜ.க.வுடன் உறவுவைத்துக் கொண்டு வருகின்றன. எனவே இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் விழி பிதுங்கிப் போய்உள்ளனர். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு திட்டத்தையும் இந்த அரசு அமல்படுத்தவில்லை.
சைதை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை தேர்ந்தெடுத்து தமிழக அரசியலில் சரித்திரம் படைக்க வாக்காளர்கள் முன் வர வேண்டும்என்றார் அவர்.
வேட்பாளர் நந்தகோபாலும் இக்கூட்டத்தில் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications