பாகிஸ்தானில் முஷாரபுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
டெல்லி:
பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை இந்தியா தயாராகி வருவதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத் பார்டர் போலீஸ், மத்திய ரிசர்வ்போலீஸ் படை, காஷ்மீர் மாநில போலீஸ் சிறப்புப் படை ஆகியவை இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன.
அதே போல கடலோரக் காவல் படையையும் இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டின கீழ் பாதுகாப்பு அமைச்சகம்கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் அனைத்து விதமான படைகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
எல்லையில் பெர்னாண்டஸ்:
இந் நிலையில் எல்லைப் பகுதி நிலையை நேரில் பார்வையிட பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்றுகாஷ்மீர் செல்கிறார். போர் முக்கியத்துவம் வாய்ந்த பிகானிர் பகுதிக்குச் செல்லும் அவருடன் ராணுவத் தளபதிபத்மநாபன், விமானப் படைத் தளபதி கிருஷ்ணசாமியும் செல்கின்றனர்.
அங்குள்ள விமானப் படைத் தளத்தின் ஏற்பாடுகளையும் ராணுவத்தின் தயார் நிலையையும் பெர்னாண்டஸ் நேரில்பார்வையிடுவார். நாளையும் பெர்னாண்டசும் ராணுவ, விமானப் படைத் தலைவர்களும் காஷ்மீரில் இருப்பர்.
சில தினங்களில் பிரதமர் வாஜ்பாயும் காஷ்மீர் செல்லவிருக்கிறார்.
இஸ்ரேல் ஆதரவு:
இந் நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைக்கு இஸ்ரேல் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்நாட்டு அதிபர் மோஷே கட்சாவ் கூறுகையில், இந்தியா போன்ற மாபெரும் தேசத்துடன் எங்களுக்கு நல்லுறவுநிலவி வருவதை நினைத்து பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரவாதத்தை அந்த நாடு அடியோடு வேறருக்க முடியும் என்றார்.
உள்நாட்டு எதிர்ப்பில் முஷாரப்:
தீவிரவாதக்குக்கு எதிரான போரில் இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துஓரணியில் திரண்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் அதிபர் முஷாரபுக்கு அந் நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
முதலில் தனது பதவியை முஷாரப் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை இடைக்கால அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என முக்கிய கட்சிகள் கோரியுள்ளன. 30 அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளன. அவர் அதிபர் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், ராணுவத் தலைவர் பதவியில்இருந்தும் விலக வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரியுள்ளன.
இந்த 30 கட்சிகள், மத அமைப்புகளின் திடீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முஷாரபை பதவி நீக்கக் கோரும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், தனது நடவடிக்கைக்கு நாடே ஆதரவு தெரிவிக்கும் என்றநம்பிக்கையில் இருந்த முஷாரபின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி ஆதரவைப் பெற முஷாரப் திட்டமிட்டிருந்த நிலையில் இந்தக் கூட்டம்நடத்தப்பட்டு அவருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது முஷாரபுக்கு விழுந்த பலத்த அடியாகக்கருதப்படுகிறது.
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டாம் எனவும் அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் அந்தக் கட்சிகள் இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications