பொறியியல் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கானவிண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்கொண்டு வரப்பட்டுவிட்டன.
இந் நிலையில் இன்று முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்குமான விண்ணப்பங்கள் தரப்படுகின்றன. இது குறுத்துஅண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2002-2003ம் ஆண்டில் என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்:
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கரூர் வைஸ்யா வங்கிகளிலும் இந்த விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இது தவிர,
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
வேலூர் பாகாயம் தந்தை பெரியார் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி
காரைக்குடி அழகப்பா செட்டியார் என்ஜினியரிங் கல்லூரி
கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி
திருநெல்வேலி என்ஜினியரிங் காலேஜ், சேலம் என்ஜினியரிங் காலேஜ்
பர்கூர் என்ஜினியரிங் காலேஜ் போன்ற 7 மையங்களில் கிடைக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 255 ரூபாய் செலுத்தியும், மற்றவர்கள் 455 ரூபாய்செலுத்தியும் விண்ணப்பங்களை மேல் குறிப்பிட்ட வங்கியிலும் கல்லூரிகளிலும் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலம் பெற:
தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற விரும்புபவர்கள், "டைரக்டர், அட்மிஷன்ஸ், அண்ணாபல்கலைக்கழகம்" என்று டி.டி எடுத்துசெயலாளர், தமிழ்நாடு என்ஜினியரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25 என்ற முகவரிக்குஅனுப்பவேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 315 ரூபாய்க்கும் மற்றவர்கள் மற்றவர்கள் 515 ரூபாய்க்கும் டி.டி. அனுப்ப வேண்டும்.
மாநிலத்தின் அனைத்து என்ஜினியரிங் கல்லூரிகளையும் பற்றிய விவரம் அடங்கிய புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள் ரூ. 50கூடுதலாகக் கொடுத்து, விண்ணப்பங்கள் வாங்கும் போது பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு என்ஜினியரிங் அட்மிஷன்ஸ், அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை - 25 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 10.06.2002
கவுன்சலிங்:
என்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கான கவுன்சிலிங் ஜூன் மாதம் 3ஆவது வாரம் தொடங்கும். ஒற்றை சாரள (சிங்கிள் விண்டா)முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை, கோவை, திருச்சி,மதுரை ஆகிய நான்கு இடங்களில் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications