அதிமுகவினர் மின் திருட்டு: இளங்கோவன் எச்சரிக்கை
ஈரோடு:
வாணியம்பாடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் போது மின்சாரம் திருடப்பட்டது மற்றும் அரசுஎந்திரங்கள் முறைகேடாகப் பயன்பட்டது ஆகியவற்றுக்காக அத்தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்தல் கமிஷன்தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா வருகையையொட்டி சுமார் 2,000 டியூப் லைட், மைக் செட் மற்றும் மின் விளக்கு அலங்காரம்ஆகியவற்றுக்காக அதிமுகவினர் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடியுள்ளனர்.
மேலும் ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது அரசு எந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன.
இந்தக் காரணங்களுக்காக வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரான வடிவேலுவை அங்கு போட்டியிடமுடியாதவாறு தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் வாணியம்பாடியில் ஜெயலலிதா இரவு 10.45 மணி வரை பிரச்சாரம் செய்துள்ளார். அவரையெல்லாம்கண்டு கொள்ளாமல் திமுக தலைவர் கருணாநிதி மீது மட்டும் தேர்தல் விதிமுறைகளை மீறிப் பிரச்சாரம்செய்ததற்காக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆளும் கட்சியினருக்கு ஒரு நீதி, எதிர்க் கட்சியினருக்கு ஒரு நீதி தான் இங்கு கிடைத்து வருகிறது.
வரும் ஜூலை மாத இறுதிக்குள் காங்கிரசுடன் தமாகா இணைந்து விடும். அப்போது தமாகாவினர் கேட்கும்பதவிகள் சம பங்காகப் பிரித்துக் கொடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications