வாஜ்பாய் தலைமையில் கூடியது உயர் மட்ட பாதுகாப்புக் குழு
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று உயர் மட்ட பாதுகாப்புக் குழுவின்அவசரக் கூட்டம் நடைபெற்றது.
காஷ்மீரின் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்வதற்காக கடந்த 1996ல் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர் மட்டப்பாதுகாப்புக் குழு பரூக் அப்துல்லா தலைமையில் செயல்படுகிறது.
உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராணுவ தளபதி பத்மனாபன்,காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் ஆளுநர் சக்ஸேனா உள்ளிட்ட பல்வேறு ராணுவ அதிகாரிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை குறித்தும் காஷ்மீரின் சட்ட-ஒழுங்கு பிரச்சனைகுறித்தும் அக்கூட்டத்தில் வாஜ்பாய் ஆலோசித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து கடும் போர் புரிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நேற்று ராணுவவீரர்கள் மத்தியில் பிரதமர் வாஜ்பாய் கூறியதைத் தொடர்ந்து, இன்று இந்த அவசரக் குழு கூடியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
புகழ் பெற்ற தல் ஏரியின் கரையில் அமைந்திருந்த சர்வதேச கன்வென்சன் கட்டடத்தில் இக்கூட்டம் நடந்தது.கட்டடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள சாலைகள் முழுவதும் சீல் வைத்துஅடைக்கப்பட்டன. எந்தவொரு தனியார் வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று பிற்பகல் பத்திரிக்கை நிருபர்களையும் வாஜ்பாய் சந்திக்கவுள்ளார். முன்னதாக காஷ்மீரின்முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் வாஜ்பாய் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதற்கிடையே டெல்லியிலும் பாதுகாப்புக் குழு இன்று அவசரமாகக் கூடுகிறது.
வாஜ்பாய் மேடையில் வெடிகுண்டா?
இந்நிலையில் குப்வாராவில் நேற்று வாஜ்பாய் பேசவிருந்த மேடையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவயர்லெஸ் மூலம் வந்த தகவலையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றமடைந்தனர்.
உடனடியாக வாஜ்பாய் பேசவிருந்த மேடை அங்குலம் அங்குலமாகப் பரிசோதிக்கப்பட்டது. மேடையைச்சுற்றியுள்ள பகுதிகளும் தீவிர சோதனைக்கு உள்ளாகின. ஆனால் வெடி குண்டு எதுவும் கிடைக்கவில்லை.
வாஜ்பாய் பேசவிருந்த கூட்டத்தில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான்வயர்லெஸ் மூலம் இந்தப் புரளியைப் பரப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications