போர் வராது என்கிறார் வாஜ்பாய்
ஸ்ரீநகர்:
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் போர் இருக்காது என்று பிரதமர்வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மூன்று நாள் காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லிக்குக் கிளம்புவதற்கு முன் பத்திரிக்கைநிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஜனவரி 12ம் தேதி பாகிஸ்தான் டெலிவிஷன் மூலம் தன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு ராணுவஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப், தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால் அவர் தன்னுடைய உறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டார்.
காஷ்மீரில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் முழு சுதந்திரத்துடன் வாக்களிக்க அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுநடத்தவே விரும்புகிறோம். விரைவில் நான் மீண்டும் காஷ்மீர் வருவேன். அப்போது அனைத்துக் கட்சிகளையும்சந்தித்துப் பேசுவேன்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுநடத்தவே விரும்புகிறோம். விரைவில் நான் மீண்டும் காஷ்மீர் வருவேன். அப்போது அனைத்துக் கட்சிகளையும்சந்தித்துப் பேசுவேன்.
காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ.6,165 கோடி மதிப்பிலான புதிய பொருளாதார வசதிகளை மத்திய அரசு அளிக்கும்.
287 கி.மீ. நீளமுள்ள உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் வழித் தடத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2007ம்ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்றார் வாஜ்பாய்.
போர் மேகம் ஏதும் சூழ்ந்திருக்கிறதா என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்குப் பதிலளித்த வாஜ்பாய், அது போன்றமேகம் ஏதும் வானத்தில் இருக்கிறதா என்று வானத்தைப் பார்த்தேன். ஆனால் வானம் சுத்தமாகத் தான் இருந்ததுஎன்றார்.
ஆனால் மின்னல் போன்று பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்றும் வாஜ்பாய் கூறினார்.
இந்தப் பதற்றமான சூழ்நிலை இந்தியாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது. இருப்பினும் எந்த ஒரு சவாலையும்சந்திப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் வாஜ்பாய்தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications