கஜாகிஸ்தானில் வாஜ்பாயை சந்திக்க முஷாரப் தீவிரம்
அல்மட்டி (கஜாகிஸ்தான்):
ஆசியாவில் அமைதி ஏற்படுத்துவது குறித்த மாநாடு கஜாகிஸ்தானில் உள்ள அல்மட்டியில் இன்று காலைதொடங்கியது.
இந்த மாநாடு நீண்ட காலத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள் இந்தியா-பாகிஸ்தான்இடையே பெரும் மோதல் வெடித்துள்ளதால் மாநாட்டில் இந்த விவகாரம் குறித்துத் தான் முக்கியமாகப்பேசப்படவுள்ளது.
மாநாட்டுக்குப் புறப்பட்ட பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபரை சந்திக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.ஆனால், வாஜ்பாயைச் சந்திக்கவும் அவருடன் பேசவும் ஆர்வமாக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். முதலில் தீவிரவாதிகளை நிறுத்துவதை பாகிஸ்தான் நிறுத்தட்டும், அதன் பிறகுபேச்சு நடத்தலாம் என இந்தியா கூறிவிட்டது.
கண்டுகொள்ளாத வாஜ்பாய்:
எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் வாஜ்பாயைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக முஷாரப் நிருபர்களிடம்கூறினார். ஆனால், இதை இந்தியா கண்டுகொள்ளவில்லை.
அதே போல கஜாகிஸ்தான் அதிபர் நூர்சுல்தானும் பிரதமர் வாஜ்பாயிடம் பேச்சுவார்த்தைக்கு இணங்குமாறுகேட்டுக் கொண்டார். ஆனால், அவருக்கு வாஜ்பாய் எந்த உறுதிமொழியையும் தரவில்லை. இதை நூர்சுல்தானேநிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட ஒருதீர்மானத்தை நிறைவேற்ற ரஷ்யாவும் இந்தியாவும் கலந்து பேசி வந்துள்ளன. இதனால் மாநாட்டின் முடிவில் இந்தத்தீர்மானம் நிச்சயம் நிறைவேறும்.
எல்லை நிலவரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தனியே சந்தித்து ஆலோசனை நடத்தும் வாஜ்பாயைச்சந்திக்க சீன அதிபர் ஜியாங் ஜெமினும் ஆர்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து தனது கஜாகிஸ்தானில் தனதுபயணத் திட்டத்தை ஒரு நாள் அதிகரித்துள்ளார் வாஜ்பாய்.
ரஷ்யா நிர்பந்திக்கும்:
ரஷ்ய அதிபரும் சீன அதிபரும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரபுடனும் பேச்சு நடத்தவுள்ளனர்.தீவிரவாதிகளை நிறுத்துமாறு முஷாரபிடம் அப்போது ரஷ்யா வலியுறுத்தும்.
அதே போல தனது முன்னிலையில் வாஜ்பாயையும் முஷாரபையும் சந்திக்க வைத்துவிட புடின் திட்டமிட்டுள்ளார்.இதற்காக இரு நாட்டுத் தலைவர்களுடனும் ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய்இதற்குத் தயாராக இல்லை. முஷாரப் இந்த சந்திப்புக்கு மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.
இந்தியாவுடன் எப்படியாவது பேசி தனது நாட்டின் மீது தாக்குதல் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க முஷாரப் கடும்முயற்சி செய்து வருகிறார். ஆனால், தீவிரவாதிகளை அனுப்புவதை நிறுத்தாவிட்டால் அடி உறுதி என்றுகூறிவிட்டது இந்தியா.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. முதலில் முஷாரப் தீவிரவாதிகளைநிறுத்த வேண்டும். அப்போது தான் இந்தியா இறங்கி வரும். நாங்களும் அப்போது தான் இந்தியாவிடம் இந்தவிஷயத்தில் விட்டுத் தருமாறு கோருவோம் என ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் லோசுக்யோவ் கூறினார்.
இந்த மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications