கருணாநிதி பிறந்தநாள்: தமிழ் வாழ தொடர்ந்து எழுதுவேன்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் 79வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. ஆனால், சைதாப்பேட்டையில்நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவினர் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டதைக் கண்டித்து பிறந்த நாளைகொண்டாட மாட்டேன் என அவர் அறிவித்துள்ளார்.
வழக்கமாக தனது தாயாரின் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, சகோதரிகளிடம் ஆசி பெற்றுவிட்டு திமுகதலைமையகமான அறிவாலயத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுவார் கருணாநிதி.
தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னையில் குவிவது வழக்கம். கருணாநிதியைச்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு திமுகவுக்கு நிதி வழங்குவர்.
ஆனால், இம்முறை யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று கருணாநிதி அறிவித்துவிட்டார். யாரையும்சந்திக்கவும் போவதில்லை என்று கூறிவிட்டார்.
ஆனால், அதையும் மீறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அறிவாலயத்தில் குவிந்து விட்டனர்.
பிறந்தநாளையொட்டி கருணாநிதிக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய், முன்னாள்பிரதமர்களான சந்திரசேகர், குஜ்ரால், உள்துறை அமைச்சர் அத்வானி, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பா.ஜ.க. தமிழகத் தலைவர்களான கிருபாநிதி, இல.கணேசன்,விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துச் செய்திஅனுப்பியுள்ளனர்.
தமிழ் வாழ தொடர்ந்து எழுதுவேன்:
நேற்று கருணாநிதி எழுதிய மீசை முளைத்த வயதில் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து புத்தகத்தை திமுகபொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார். முதல் பிரதியை கவிஞர் வைரத்து பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நடந்து முடிந்த சைதாப்பேட்டை தேர்தல் எனக்கு பெரும் மனத் துயரத்தையும், வேதனையையும்கொடுத்து விட்டது. இதன் காரணமாகவே எனது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை.
ஜனநாயகத்திற்குப் பெயர் போன இந்தியாவில் தேர்தல் என்ற ஒன்று நடத்தப்படுவதே, மக்களால், மக்களின் பிரதிநிதி தேர்வு செய்யப்படவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தாங்கள் நினைக்கும் ஆள்தான் கண்டிப்பாக பிரதிநிதியாக வர வேண்டும் என்று ஆளும் கட்சியினர்நினைத்து விட்டால் பிறகு தேர்தல் என்ற ஒன்று எதற்கு? இப்படி ஒரு முடிவில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தால் தேர்தல் நடத்தவேதேவையில்லையே?
வேட்பு மனு தாக்கல் தேவையில்லை, பிரசாரம் தேவையில்லை, வாக்குப் பதிவும் தேவையில்லை. இன்னார்தான் இந்தத் தொகுதியின்பிரதிநிதி என்று அறிவித்து விடலாமே? அதை விட்டு விட்டு தேர்தல் முறையையே கேவலப்படுத்துவதா?
ஜவஹர்லால் நேரு, ராஜாஜி போன்றோர் காலத்திலிருந்து அரசியல் நடத்தி வருகிறேன். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்இப்போது கண்டது போல வரலாறு காணாத ஜனநாயகப் படுகொலையை எப்போதும் கண்டதில்லை. திமுகவை அழிக்க, நசுக்கநினைக்கிறார்கள் சிலர். ஆனால் நிச்சயமாக அது நடக்கப் போவதில்லை. யாராலும் திமுகவை ஒழித்துவிட முடியாது.
65 ஆண்டு காலமாக அரசியலில் இருந்து வருகிறேன். முன்பே இறந்திருந்தால் இதுபோன்ற ஜனநாயக படுகொலைகளையெல்லாம்பார்த்திருக்க மாட்டேன்.
தேர்தல் தோல்விகள் எங்களுக்குப் புதிதல்ல. அதனால் மனம் உடைந்து போகிறவர்கள் அல்ல நாங்கள். போலீஸாருக்காக எத்தனையோதிட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. ஆனால் அதையெல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள்.
தமிழ் வாழ, தமிழன் தலை நிமிர தொடர்ந்து எழுதுவேன். எனது எழுத்துக்கு தடை போட என்னாலேயே முடியாது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் கவிஞர்கள் அப்துல் ரகுமான், வாலி மற்றும் கருணாநிதியின் புதல்வி கனிமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேர்தல் ஆணையத்துக்கு கருணாநிதி கண்டனம்:
சைதை தொகுதியில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது, கையில் ஏற்பட்டுள்ள பெரியபுண்ணை கண்ணாடி போட்டு பார்ப்பது போல உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சைதை தொகுதியில் நடந்த இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது போலீஸாரின் துணையோடும்,ரவுடிகளை வைத்து தேர்தல் ஏஜென்டுகளை அடித்து விரட்டியதும், தாசில்தார் கொடுத்த ஆயிரக்கணக்கான போலிச் சான்றிதழ்களைபயன்படுத்தியதும், இதையெல்லாம் போலீஸாரும், வாக்குச் சாவடிகளில் இருந்த அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்ததையும்அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன.
இந்த வேளையில், வாக்கு எண்ணிக்கையை மட்டும் ஒத்தி வைத்திருப்பதாகவும், விசாரணை நடத்தப் போவதாகவும் தேர்தல் ஆணையம்அறிவித்திருப்பது கைப் புண்ணுக்கு கண்ணாடி தேடுகிற வேலையாக இருக்கிறது. இது சாதாரண பிரச்சினை அல்ல. இந்திய ஜனநாயகம்உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது.
எனவே ஜனநாயக முறையை கேலிக்கூத்தாக்கி உள்ளவர்களுக்கு விசாரணை, ஒத்திவைப்பு என்று ஒத்தடம் கொடுப்பதை விட்டு விட்டுஜனநாயகத்தை மதிக்கும், மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக எழுந்துள்ள மறு வாக்குப் பதிவை எல்லா வாக்குச் சாவடியிலும் நடத்துவதேஏற்கக் கூடிய ஒன்றாகும் என்று கூறியுள்ளார் அவர்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications