ஏழைக் குடும்பத்தை சீரழிக்க முயலும் அமெரிக்க பெருசு
சேலம்:
சேலத்தில் 21 வயது பெண்ணை மிரட்டி திருமணம் செய்ய முயன்று வருகிறார் 75 வயதான அமெரிக்க மத போதகர் ஒருவர்.
தனது மகளை காப்பாற்றும்படி அந்தப் பெண்ணின் தந்தை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
சேலம் அம்மாப்பேட்டை எஸ்.கே.நகரில் வசித்து வருபவர் ஜேம்ஸ் . இவரது மனைவி மெர்சி. இத்தம்பதியருக்கு ரோஸ்லின்ஜூலி (21), ஹெலன் (15) என்று இரு மகள்கள் உள்ளனர். ஜேம்ஸ் நேற்று தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கலெக்டர்அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
நான் போலியா நோயினால் தாக்கப்பட்டவன். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். டவுன் பஸ் விபத்தில் எனக்கு வலது காலில்எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் நான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு விறகு, பழைய பிளாஸ்டிக், இரும்புவியாபாரம் செய்து வந்தேன். குழந்தைகளுக்கு டியூசனும் சொல்லிக் கொடுத்தேன்.
இதில் எனக்கு 3,000 முதல் 5,000 ரூபாய் வரை வருமானம் வரும். ஒத்திக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்தேன். பஸ்விபத்திற்கு கொடுத்த இழப்பீட்டுத் தொகை ஒன்றரை லட்ச ரூபாயை வங்கியில் சேமித்து அமைதியாக வாழ்ந்து வந்தேன்.என்னுடைய மூத்த மகள் சேலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிரீட்டிங்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறாள். அஞ்சல் வழிக்கல்வி மூலம் பி.காம் படித்து வருகிறாள். எனது இளைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாள்.
அமெரிக்காவிலிருந்து சேலத்துக்கு...
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வந்த லூயிஸ் தவுசன் (75) என்பவர் சேலத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்குபிரசங்கம் செய்ய வந்தார். அவர் ஜூலி வேலை பார்க்கும் கடைக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது ஜூலியை பற்றியும்எங்கள் குடும்பத்தை பற்றியும் விசாரித்துள்ளார்.
ஜூலியிடம் அவர் தன்னைப் பற்றிக் கூறும் போது, சேலத்தில் உள்ள ஆலயங்களில் பிரசங்கம் செய்வதற்காக வந்துள்ளதாகவும்,தனக்கு 2 மனைவிகள், 4 மகன்கள், 5 மகள்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நான் பல நாடுகளுக்கும் சென்றுபிரசங்கம் செய்வேன். ஏழை எளியவர்களுக்கு பணம் இருப்பவர்களிடம் இருந்து பணம் வாங்கி ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
உடனே எனது மகள் எங்கள் குடும்பத்தையும், குடும்பத்தின் வறுமையையும் பற்றிக் கூறியிருக்கிறாள். இதையடுத்து, எங்கள்வீட்டிற்கு லூயிஸ், பேர்லாண்சில் உள்ள தனியார் சர்ச் பொறுப்பில் பணிபுரியும் சியாம் வர்க்கீஸ் மற்றும் தீனன் ஆகியோர் வந்துஎங்களது குடும்பத்தையும், எனது கால் ஊனத்தையும் வீடியோ எடுத்தனர். லூயிஸ், உலக நாடுகளுக்கு செல்லும் போது இந்தவீடியோவை போட்டுக் காட்டி பணம் பெற்றுத் தருவதாகக் கூறினார்.
இவ்வாறு எங்களுக்கு அறிமுகமான லூயிஸ், எனது மகளுக்கும் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார்.இங்கிலீஸ் கோச்சிங் கிளாஸ் அனுப்பும் படியும், டிரைவிங் கற்றுக் கொடுக்கும்படியும், பாஸ்போர்ட் தயார் செய்யும்படியும் கூறி2,000 ரூபாய் கொடுத்தார்.
இம்சை தந்த பெருசு:
இதை உண்மை என்று நம்பிய நாங்கள் அவர் கூறியபடி அனைத்தையும் செய்தோம். லூயிஸும் அமெரிக்காவில் இருந்துகடிதங்கள் மூலம் எங்களை தொடர்பு கொள்வார். லூயிஸ் எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சியாமும், தீனனும் வருவார்கள்.லூயிஸ் எங்கு சென்றாலும் ஜூலி தான் கார் ஓட்டுவாள்.
அதன்பின்னர், லூயிஸ் எனக்கு எக்ஸ்போர்ட் தொழில் தொடங்கி தருவதாகவும், அதற்காக வீட்டை மாற்றும்படியும் சொன்னார்.மேலும் 20,000 ரூபாய் அட்வான்ஸ் மற்றும் 4,000ஆயிரம் ரூபாய் வாடகையுடன் ஒரு வீடையும் பார்த்துக் கொடுத்தார்.
எதற்காக இந்த வசதியான வீடெல்லாம்? என்று நான் கேட்டதற்கு, எக்ஸ்போர்ட் தொழிலுக்கு ஏற்ற இடம் இது தான்; ஜூலிஅமெரிக்கா சென்று சம்பாதிக்கும் வரை நான் வாடகை தருகிறேன்; அதன்பின் ஜூலி வாடகை கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வாள் என்று கூறினார். நாங்களும் அதை உண்மை என்று நம்பினோம்.
புதிய வீட்டிற்கு குடிவந்த பின் தான், லூயிஸ் நேரடியாக இம்சை கொடுக்க ஆரம்பித்தார். எனது மகளை அடிக்கடி வெளியேஅழைத்துச் செல்வார். வீடியோ கற்றுத் தருகிறேன் என்று கூறி ஜூலியை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்துபடுக்கைக்கு வா என்றெல்லாம் கூறி ஜூலிக்கு இம்சை கொடுத்துள்ளார். இதை உன் தாய் தந்தையரிடம் கூறினால் உன்னையும்உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என்றெல்லாம் மிரட்டியுள்ளார்.
லூயிஸின் வற்புறுத்தல் எல்லை மீறவே, இதை தாங்க முடியாத என் மகள், லூயிஸின் மோசமான நடவடிக்கைகள் பற்றி என்னிடம்கூறினாள். இதை அறிந்த லூயிஸிடமே நேரடியாக நியாயம் கேட்டேன். 21 வயது நிரம்பிய என் மகளை 75 வயதுள்ள நீ திருமணம்செய்து கொள்ள ஆசைப்படுகிறாயே? பிரசங்கத்தில் எல்லாம் ஜூலியை என் மகள் என்று கூறி இருக்கிறாய். ஆதலால் இந்தஎண்ணத்தை விட்டுவிடு என்று எச்சரித்தேன்.
சித்ரவதை:
ஆனால் லூயிஸோ தன்னுடைய எண்ணத்தை கைவிடாமல், ஜூலியை எனக்கு திருமணம் செய்து வைத்தால், எக்ஸ்போர்ட்கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்று பதிலளித்தார். பழைய வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.என்னுடைய ஒன்றரை லட்ச ரூபாயையும் வாங்கி செலவழித்துவிட்டு, ஏன் எங்களை சித்ரவதை செய்கிறாய் என்று கேட்டேன்.
அடுத்த நாளே சியாமையும் தீனனையும் அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுத்தார். வீட்டு வாடகையை நான் அனுப்புகிறேன்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். இதை வெளியே யாரிடமாவது சொன்னால் உங்கள் குடும்பத்தையே அழித்து விடுவேன்.உங்கள் உயிர் உங்கள் கையில் தான் உள்ளது. உங்களிடம் வாங்கிய பணத்தை செம்டம்பர் மாதம் வரும் போது தருகிறேன் என்றுகூறி, ஜூலி பெயரில் வாங்கிய டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை ஒரு அறையில் வைத்து பூட்டி அதன் சாவியை சியாமிடம்கொடுத்துவிட்டார்.
செப்டம்பர் மாதம் பணம் வரும் வரையாவது பொறுமையோடு இருப்போம் என்றிருந்த எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.திடீரென்று சியாம் மற்றும் தீனன் வீட்டை காலி செய்து விட்டு, எங்களையும் வீட்டுக்காரர்களிடம் சொல்லி காலி செய்யசொன்னார்கள். அதோடு எங்கள் பெண் ஜூலியை பற்றி தவறாக போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
அமைதியாக இருந்த எங்கள் வாழ்க்கையில் நிம்மதியை கெடுத்து விட்டார்கள். எந்த நேரத்திலும் எங்கள் உயிருக்கு ஆபத்துநேரலாம். அதோடு அவர்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றி தவறாகவும் பேசியுள்ளார்கள். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கைஎடுத்து, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஜூலி கூறியதாவது:
லூயிஸ் ஆரம்பத்தில் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். 75 வயது மிக்க முதியவர் என்பதால் எதவித பய உணர்வும் இன்றிஅவரிடம் பழகினேன். அவரை பெரிதும் நம்பியதால், அவர் சொன்னபடியெல்லாம் கேட்டோம்.
அடிக்கடி என்னை அழைத்துப் பேசுவார். எனக்கு வீடியோ எடுக்க கற்றுக் கொடுப்பார். சில சமயம் என்னை அழைத்து முத்தம்கூட கொடுத்துள்ளார். வயதானவர், மிகவும் பாசமாக இருக்கிறார் என்று நினைத்தேன். அப்போது எனக்கு ஒன்றும்தோன்றவில்லை. அதன்பின்னர் அவர் பழகுவது, அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை.
இதை என் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் இது குறித்து கேட்ட போது, அவர் வெளிப்படையாக என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். இதில் என் குடும்பத்தினர் அனைவரும் வேதனை அடைந்தோம். மேலும் இது குறித்து வெளியில்கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி மனு கொடுத்துள்ளோம் என்றுகூறினார்.
இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று தெரியவில்லை. ஜேம்ஸ் மற்றும் அந்தக்குடும்பத்தினர் மிக அப்பாவிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications