ஜெயாவின் சிக்கன நடவடிக்கையால் 35,000 ஊனமுற்ற குழந்தைகள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு சிக்கன நடவடிக்கை என்ற பேரில் ஊனமுற்ற மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளுக்கு செல்லவேண்டிய தொகையை குறைத்ததால் சுமார் 35,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊனமுற்ற மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளுக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு,தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பில், பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றிலிருந்து கிடைக்கும் பணத்தால் தான் அந்தக் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப்பள்ளிகள் மாநில சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் மாவட்ட மறுவாழ்வு அலுலரின் பரிந்துரையோடுநடத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளுக்கு மறுவாழ்வு அலுவலரின் பரிந்துரை இல்லையென்றால் அவற்றைத் தொடர்ந்து நடத்துவதுமிகவும் கடினம். மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து அவற்றை நீக்கும் உரிமையும்மறுவாழ்வு அலுவலருக்கு உண்டு.

முந்தைய அதிமுக ஆட்சியில் குழந்தை ஒன்றுக்கு மாதம் ரூ.90 வீதம் பராமரிப்பு நிதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக ஆட்சியில் இத்தொகை ரூ.200ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தலின் போது இந்தத் தொகை ரூ.300ஆகஅதிகரிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததொகையிலும் 48 சதவீதத்தைக் குறைத்தது அதிமுக.

இதனால் தமிழகம் முழுவதிலும் 200 பள்ளிகளில் உள்ள சுமார் 35,000 ஊனமுற்ற குழந்தைகள் இதனால் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்தப் பள்ளிகள் வெளி இடங்களில் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தொண்டுநிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கே தங்கள் தொண்டுள்ளத்தை அதிகமாகக் காட்ட நினைக்கிறார்களே தவிரயாரும் இந்த ஊனமுற்ற, மனநிலை குன்றிய குழந்தைகளின் மேல் பரிவு காட்டுவதில்லை என்று பள்ளி நிர்வாகிகள்தெரிவிக்கின்றனர்.

இந்த சிக்கன நடவடிக்கையால் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில்உள்ள ஊனமுற்ற பள்ளிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+