வெட்டியாய் மறு தேர்தல் நடத்துவதா?: ஜெ, சுவாமி
சென்னை:
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கருணாநிதியை திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரேகாரணத்திற்காகத் தான் தேவையே இல்லாமல் சைதாப்பேட்யையில் 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவுநடத்துகிறார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அங்கு போலி சாதிச் சான்றிதழ்களைத் தயாரித்து கள்ள ஓட்டுகளுக்கு ஏற்பாடு செய்ததே திமுக தான் எனவும் அவர்குற்றம் சாட்டினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சைதாப்பேட்யிைல் மறுவாக்குப் பதிவே தேவையில்லை. அங்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை. திமுகவும்பாமகவும் தான் முறைகேடுகள் நடந்ததாக புலம்பிக் கொணடுள்ளன.
கடந்த 31ம் தேதி இந்தத் தொகுதியில் தேர்தல் நடந்தபோது மக்கள் மிக சுமூகமான சூழ்நிலையில் எந்தவிதமானபயமும் இன்றிவாக்களித்தார்கள்.
தங்களுக்கு தோல்வி உறுதி என்பது தெரிந்துபோனதால் திமுகவினர் நாடகம் நடத்தி இங்கு மறு தேர்தல் நடத்தத்திட்டமிட்டிருந்தனர்.
2000ம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது அறந்தாங்கி, நெல்லிக்குப்பம், திருச்சி-2 ஆகிய தொகுதிகளில்இடைத் தேர்தல் நடந்தது. அப்போது திருச்சி-2 தொகுதியில் திமுகவினர் செய்த முறைகேடுகள் இருக்கிறதே அதைசொல்லி விளக்க முடியாது. அட்டூழியம் செய்தனர்.
ஆளும் கட்சியாக இருந்த காரணத்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் கட்சியைச் சேர்ந்த பூத்ஏஜெண்டுகளை அடித்து விரட்டினர் திமுகவினர். இதை நாங்கள் வீடியோவில் பதிவு செய்தோம். அந்த வீடியோகாசெட்டைக் காட்டி முறைகேடுகளை தேர்தல் கமிஷனிடம் விளக்கினோம். மறு தேர்தல் நடத்துமாறு கேட்டோம்.
ஆனால், அதை தேர்தல் கமிஷன் நிராகரித்து. அடுத்த இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி திமுகவென்றதாக அறிவித்தது தேர்தல் கமிஷன்.
சைதாப்பேட்டையில் கருணாநிதி சொல்வது மாதிரி போலி ஜாதிச் சான்றிதழ்கள் எல்லாம் அதிமுகவினர் தயார்செய்யவில்லை. அதைத் தயார் செய்து கள்ள ஓட்டுகளுக்கு வழி செய்தது திமுகவினர் தான். இதை தேர்தல்கமிஷனிடம் கூறியிருக்கிறோம் என்றார் ஜெயலலிதா.
மறுவாக்குப் பதிவை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனை அணுகுவீர்களா என்று கேட்டபோது,
அதற்கு எங்கே கால அவகாசம் இருக்கிறது. நாளைக்கு மறுதேர்தல் என்று திடீரென அறிவித்திருக்கிறார்கள். இந்தத்தேர்தலையும் சந்திப்போம் என்றார் ஜெயலலிதா.
கள்ள ஓட்டும் கருணாநிதியும்-- சுவாமி
இதற்கிடையே சைதாப்பேட்டையில் மறுதேர்தல் தேவையில்லை என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கூறியுள்ளார்.
கள்ள ஓட்டுப் பற்றிப் பேச திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்றும் அவர்கூறினார்.
இதுகுறித்து சுவாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டையில் 58 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆனால்தேர்தல் கமிஷனின் இந்த முடிவு தேவையில்லாதது.
மீண்டும் தேர்தல் நடத்தினாலும் எப்படியும் அதிமுக தான் வெற்றி பெறப் போகிறது.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் ஏராளமான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக கருணாநிதி புகார்கூறியுள்ளார். இதைச் சொல்வதற்கு அவருக்கு அறுகதை இல்லை. வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுக்கள்போடுவதை ஊக்குவித்ததே கருணாநிதி தான். தமிழகத்தில் கள்ள ஓட்டு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதேகருணாநிதி தான்.
தேர்தல் நடந்த இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு இடம் இல்லைஎன்பதை மக்கள் தெளிவாகத் தெரிவித்து விட்டனர்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போதே இந்தியா மறுதாக்குதல் நடத்தி இருக்கும். ஆனால்அமெரிக்காவின் தலையீட்டால் பிரதமர் வாஜ்பாய் அமைதியாகிவிட்டார் எந்றார் சுவாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications