கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது திருவண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் 26 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழாநடைபெறவுள்ளது. இம்மாதம் 26,27ம் தேதிகளில் இந்த புனித நிகழ்ச்சி நடக்கிறது.

பஞ்சபூதங்களில் அக்னியின் இருப்பிடமாகக் கருதப்படும் திருவண்ணாமலையில் இந்த குடமுழுக்குக்காக 40,000சதுர அடியில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 1999ம் ஆண்டில் இசைஞானி இளையராஜா தலைமையில் ஒருகமிட்டி அமைக்கப்பட்டது. ரூ. 4 கோடி செலவில் கோவிலின் 9 கோபுரங்களிலும் திருப்பணிகள் நடந்துமுடிந்துள்ளன.

இம் மாதம் 26ம் தேதி பரிகார தெய்வங்களுக்கும் 27ம் தேதி முக்கிய தெய்வங்களுக்கும் குடமுழுக்குநடக்கவுள்ளது.

இந்த இரு நாள் விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+