கூப்பன் இருந்தால் மட்டுமே இனி ரேசனில் அரிசி
சேலம்:
ஜூலை 1ம் தேதி முதல் அரிசிக் கூப்பன் வைத்துள்ள கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரேஷன் கடையில் அரிசி வினியோகம் செய்யப்படும்என்று மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபால் கூறியுள்ளார்.
சேலத்தில் பல பகுதிகளில் ரேஷன் கடைகளில் அமைச்சர் தனபால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், தமிழகம் முழுவதிலும் ரேசன் கார்டுதாரர்ளுக்கு அரிசிக் கூப்பன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.இதுவரை 1 கோடியே 35 லட்சத்து கூப்பன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அரிசிக் கூப்பன் உள்ளவர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படும். மொத்தம் 2 லட்சத்து 15,000 டன் அரிசிஇதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அரிசிக் கூப்பனுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஆங்காங்கே உள்ள சில நடைமுறைக் குறைபாடுகள் களையப்பட்டு சரிசெய்யப்பட்டு விடும்.
கூட்டுறவு வங்கிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். அதற்கான முயற்சிகளில் அரசு விரைவில் ஈடுபடும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
