சென்னையை கலக்கிய மதுரை ரவுடி காட்டான் கைது
சென்னை:
சென்னை நகரில் பல காலமாக அட்டூழியம் செய்து வந்த மதுரையைச் சேர்ந்த ரவுடி "காட்டான்" சுப்ரமணியம் போலீஸாரிடம் பிடிபட்டான்.
மதுரை அருகே உள்ள மேலூரைச் சேர்ந்தவர் "காட்டான்" சுப்ரமணியம். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை வந்து விட்டான் "காட்டான்".சென்னையில் அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் தனது ரவுடித்தனத்தை ஆரம்பித்தான்.
அந்தப் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து செய்வது, கொலைகள், பணம் பறிப்பது, கடைகளில் மாமூல் வசூலிப்பது என சட்டவிரோதகாரியங்களில் ஈடுபட்டுப் "பெரியவர்" ஆனான்.
காட்டான் மீது 5 கொலை வழக்குகள், கடத்தல், கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 30 வழக்குகள் வரை உள்ளன. சில மாதங்களுக்கு முன்புஇவனைப் பிடிக்கச் சென்ற போலீஸ் பிடியில் இருந்து தப்பிவிட்டான். அப்போது தன்னை பிடிக்க வந்த போலீசாரையே தாக்கினான்.
பின்னர் தலைமறைவாக இருந்த இவன் சமீபத்தில் அணுகுண்டு ஆறுமுகம் என்ற ரவுடியை தீடீரென ரோட்டில் வைத்து வெட்டி வீழ்த்திவிட்டு மறுபடியும் தலைமறைவானான்.
காட்டான் சுப்ரமணியத்தை போலீஸார் வலைவீசித் தேடி வந்தனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையைச்சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் பிரித்விராஜன், செல்வராஜ், முருகேசன் ஆகியோர் அரும்பாக்கம் பஸ் நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகாலை வந்து கொண்டிருந்தபோது காட்டான் அவர்கள் கண்ணில் பட்டான்.
இதையடுத்து அவனை போலீஸார் விரட்டிச் சென்றனர். கடும் சேசுக்குப் பின் காட்டனை பாய்ந்து பிடித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications