ஜனாதிபதி பதவிக்கு கலாம்: ஜெயலலிதா, கருணாநிதி பெரும் மகிழ்ச்சி
சென்னை:
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள டாக்டர் அப்துல்கலாமுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர்கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் விஞ்ஞானிகள் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருக்கும் அப்துல்கலாமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதாஅவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இதற்கு கலாம் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொண்டார்.
இன்று ஜெயலலிதா வெளிட்டுள்ள அறிக்கையில், அப்துல்கலாமை ஜனாதிபதியாக்குவது குறித்து என்னிடம்வாஜ்பாய் நேற்று தொலைபேசியில் பேசினார். நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கலாமுக்கு ஆதரவு மட்டுமின்றிஅவரைத் தேர்ந்தெடுக்க முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக பிரதமரிடம் உறுதியளித்தேன்.
சர்வதேச புகழ் பெற்ற அப்துல் கலாம், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு மிகுந்த பெருமை தருகிறதுஎன்று கூறியுள்ளார்.
கருணாநிதி வாழ்த்து:
இந் நிலையில் அப்துல் கலாமுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில்,தமிழகத்தின் பெருமையையும் இந்தியாவின் சிறப்பையும் மீண்டும் உயர்த்தியுள்ளீர்கள். உங்களுக்கு எனது மனம்மகிழ்ந்த, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி:
அப்துல் கலாம் ஜனாதிபதியாக்கப்படுவதை விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பிரதமரின்பாதுகாப்பு ஆலோசகரும் கலாமுடன் இணைந்து அணுகுண்டு சோதனை நடத்திய சக விஞ்ஞானியுமான டாக்டர்சிதம்பரம் இது குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் ஒரு மகத்தான மனிதர், முழுமையானஇந்தியர் என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த கலாம் தனது பொறுப்பை சிதம்பரத்திடம் ஒப்படைத்துவிட்டுத் தான்ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தியபோது ரகசியத்தைக் கட்டிக் காக்க அப்துல்கலாமுக்கு தரப்பட்டபெயர் கர்னல் பிருதிவிராஜ். இந்தப் பெயரை அவருக்கு அப்போது சூட்டியவர் சிதம்பரம் தான். கலாம்உருவாக்கிய பிருத்வி ஏவுகணையை மனதில் வைத்து இந்தப் பெயரை சூட்டினார் சிதம்பரம்.
விஞ்ஞானிகள் என்பதைத் தவிர இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். இணைந்து பணியாற்றும்போதுசிதம்பரத்துடன் தமிழில் பேசி மகிழ்பவர் கலாம்.
கி.வீரமணி பாராட்டு:
இந்தியர்களால் மதிக்கப்படும் பண்பாளரான அப்துல் கலாம் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடிய பொதுமகன், நாடு போற்றும்பண்பாளர் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அனைத்துக் கட்சிகளும் அப்துல்கலாமுக்கு முழுமையான ஆதரவைத் தர வேண்டும். நாடு இப்போதுள்ள நிலையில் அப்துல் கலாம் போன்றவர்களை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுப்பது சாலப் பொருத்தமானது என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications