அரசின் புதிய கணக்கெடுப்பு: அரசு ஊழியர்கள் இடையே அச்சம்
சென்னை:
45 முதல் 58 வயது வரையுள்ள அரசு ஊழியர்கள் குறித்த கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் அரசுஊழியர்களிடையே பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
அரசு நிர்வாக சீரமைப்பு கமிஷன் சமீபத்தில் அரசிடம் பல பரிந்துரைகளை தாக்கல் செய்தது. அதன்படி ஒவ்வொரு சீரமைப்புத் திட்டமாகஅரசு அறிவித்து வருகிறது.
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்யத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைஏற்காத ஊழியர்களுக்கு பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அடுத்தபடியாக கணவன், மனைவி இருவரும் அரசு ஊழயராக இருந்தால் ஒருவரது வீட்டு வாடகைப் படியை ரத்து செய்யவும்உத்தரவிட்டுள்ளது. சொந்த வீடு வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு வாடகைப் படி கட் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பளக் குறைப்பு, சலுகைத் தொகைகள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்த உள்ளது.ஓய்வு பெறும் வயதையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், இதை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டம் போன்ற அடாவடிசெயல்களில் ஈடுபட முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். முதல்கட்டமாக வேலை நிறுத்தத்தை தடை செய்துவிட்டு அடுத்தடுத்து அரசுஊழியர்களுககு ஆப்பு அடித்து வருகிறது தமிழக அரசு.
இந் நிலையில் ஒவ்வொரு அரசுத் துறையின் தலைவர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை அரசு அனுப்பியுள்ளது. அதில், 45 முதல் 58 வயதுவரையிலான ஊழியர்கள் எத்தனை பேர் அந்தத் துறைகளில் உள்ளார்கள் என்ற பட்டியலை அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்கள் எத்தனை பேர் தற்போது பணியில் உள்ளார்கள், இவர்களுக்காக அரசு வருடம்தோறும் எவ்வளவு தொகையை செலவழித்து வருகிறது, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் படிகள், சம்பளம் உள்ளிட்ட விவரங்கள்என்ற விவரங்களையும் கொடுக்குமாறு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் நிர்வாக சீரமைப்புக் கமிஷன் தலைவர் சந்தானம் உத்தரவின் பேரில் இந்த புதிய சர்க்குலரை தமிழக அரசு அனுப்பியுள்ளதாம்.மொத்தம் 128 துறைத் தலைவர்களுக்கு இந்த சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.
தானாக முன் வந்து ஓய்வு பெறும் திட்டத்தை அரசு விரைவுபடுத்தவுள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாகவே இந்த விவரங்களைகணக்கெடுத்து வருவதாகவும் அரசு ஊழியர்களிடையே கருத்து நிலவுகிறது.
ஏற்கனவே பொதுப்பணித்துறை, வனத்துறை, கல்வித் துறை, அரசு மருத்துவமனைகள், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகளில்துப்புறவுப் பணி, தோட்டக்காரர்கள் ஆகிய பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து விட்டது அரசு.
இந் நிலையில் மேலும் சில துறைகளில் தனியாரை நுழைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக ஊழியர்களிடையே கருத்து நிலவுகிறது.
தற்போது அனுப்பப்பட்டுள்ள சர்க்குலர் மூலம் வி.ஆர்.எஸ். திட்டம் விரைவில் முழுவேகத்தில் அமல்படுத்தப்படும் என்ற அச்சம்ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications