தாமரைக்கனியின் வீட்டில் லஞ்ச- ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்ட்
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
அதிமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவி தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து வரும் தாமரைக்கனியில்வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்காக சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சிறப்புப் படை ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தது.
முன்னதாக அவரது வீட்டில் வரும் 19ம் தேதி ரெய்ட் நடத்தப் போவதாக லஞ்ச- ஒழிப்புத்துறை போலீசார்நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் கேஸ் போட்டு வெட்டியாக கோர்ட்டுக்கும் வீட்டுக்கும்அலைய விடத் திட்டமிட்டு இந்த ரெய்ட் நடத்தப் போகிறார்கள் என்று தாமரைக் கனி கூறியிருந்தார்.
ஆனால், நேற்றிரவே இந்த அதிரடி ரெய்ட் தொடங்கிவிட்டது. அவரது சொத்துக்கள் குறித்த விளக்க்ததையும்போலீசார் கேட்டுள்ளனர். சொத்துக்கள், அதை எப்படி அவர் வாங்கினார் என்பது குறித்த தகவல்களைஉடனடியாக தெரிவிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சித் தலைவராக உள்ளார் தாமரைக்கனி. கடந்த தேர்தலில் இவரை எதிர்த்துஇவரது மகன் தமிழ்ச்செல்வனை நிறுத்தியது அதிமுக தனது மகனிடமே தோற்றார் தாமரைக்கனி.
அதிலிருந்து அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு முறிந்தது. அதற்கு முன் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தேதொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் தாமரைக்கனி. சுயேச்சையாக இருமுறை வென்றுள்ளார்.
தனது குடும்பத்தையே ஜெயலலிதா திட்டமிட்டு பிரித்துவிட்டதாக தாமரைக்கனி கூறி வந்தார். தொடர்ந்துமுதல்வரை விமர்சித்து வந்தார். இதையடுத்து இந்த அதிரடி ரெய்ட் நடந்துள்ளது.
தாமரைக்கனியின் சொத்து விவரங்கள் குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி அலுவலகத்திலும் பதிவாளர்அலுவலகத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக ரெய்ட் நடக்கப் போவதாக தனக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியவுடன் தாமரைக்கனி வெளியிட்டஅறிக்கையில்,
எனக்கு சொந்த ஊரிலும் சென்னையிலும் 6 மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இதில் ஒன்ற கூட என் பெயரில்லை.காலமான என் பெற்றோர் பெயரில் தான் உள்ளன. அவர்கள் இறக்கும்போது என் பெயரில் உயிலைக் கூடமாற்றவில்லை.
எனக்கு சொந்தமாக ஒரு ஜீப் மட்டும் தான் உள்ளது. அதை கடனில் வாங்கினேன். அந்த ஜீப் கூட இப்போதுரிப்பேர் ஆகி ஓடாமல் நிற்கிறது.
நான் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறியதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த ரெய்ட் நடத்தஉத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
வெட்டியாக கேஸ் போட்டு என்னை பயமுறுத்துகிறார்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளார் தாமரைகனி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications