சென்னை விமான நிலையம் தனியார்வசமாகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்ளிட்ட நாட்டின் 4 முக்கிய விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளன.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் பராமரிப்பதற்காக அவற்றைதனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான டெண்டர்கள் 10 நாட்களில் வெளியிடப்படவுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தவிமானங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
30 ஆண்டுகளுக்கு இவை குத்தகைக்கு தனியார்வசம் தரப்படும். ஒரு நிறுவனம் ஒரு விமான நிலையத்தை மட்டுமேகுத்தகைக்கு எடுக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதன் மூலம் விமான நிலையத்தை சுத்தமாகவும், சிறப்பான தரத்துடனும் பராமரிக்க முடியும் என்று விமானப்போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications