அண்ணா பல்கலையில் ஊதியம் வாங்க கலாம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம் ஊதியம் வாங்கமறுத்துவிட்டதாக பல்கலைக்கழக துணை வேந்தர் பாலகுருசாமி கூறினார்.

பாலகுருசாமி கூறுகையில், ஜனாதிபதி பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே தனது கெளரவ பேராசிரியர்பதவியை அப்துல் கலாம் ராஜினாமா செய்துவிட்டார். யாரும் சட்டத்தைவிட பெரியவர்கள் அல்ல என்றுநினைப்பவர் அவர்.

மாதாமாதம் ஊதியம் தர அண்ணா பல்கலைக்கழகம் முன் வந்தபோது வேண்டாம் என்று கலாம் கூறி வந்தார்.

ராஜினாமா செய்தவுடன் அவருக்கு அக்கெளண்ட் செட்டில் செய்ய பல்கலைக்கழகம் முன் வந்தது. அவரிடம் 6 மாதகாலத்துக்கான ஊதியப் பணத்தைத் தந்தேன். ஆனால், பணம் வேண்டாம் என்று கலாம் கூறிவிட்டார்.

ஆனால், தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு வீடியோ கான்பரசிங் மூலமும் முடிந்தால் நேரிலும் வந்துபாடம் நடத்தத் தயாராக இருப்பதாக கலாம் உறுதியளித்துளளார்.

அண்ணா பல்கலைக்கழக்ததின் ஆராய்ச்சிகளுக்கு கலாம் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதைஅவரிடம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக சட்டரீதியில் பிரச்சனை இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கலாம்முடிவெடுக்கவுள்ளார். அவரை இழக்க நானும் ஆராய்ச்சி மாணவர்களும் விரும்பவில்லை என்றார் பாலகுருசாமி.

எம்.ஐ.டியில்...

நேற்று சென்னை எம்.ஐ.டி. சென்ற கலாம் அங்கு பேராசியர்கள், மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பள்ளியில் கலாம்:

பின்னர் குரோம்பேட்டையில் உள்ள ராம்குவார் தேவி போம்ரா விவேகானந்தர் பள்ளிக்குச் சென்று மாணவ-மாணவிகளைச் சந்தித்தார் அப்துல் கலாம்.

பள்ளியில் பேசிய கலாம் கூறுகையில், எனது பேராசியர் நரசிம்மன் உருவாக்கிய பள்ளி இது. இங்கு வந்ததில்மிகுந்த பெருமையடைகிறேன். இந்தியாவின் இளம் குடிமக்களான நீங்கள் இந்த அழகிய தேசத்தின் மீது அன்புசெலுத்துங்கள் என்றார்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். நான் பேசுவது கேட்கிறதா என்று கலாம் கேட்க மாணவர்கள்மத்தியில் அமைதி. இதையடுத்து மேடையைவிட்டு இறங்கி தனது நாற்காலியை எடுத்து கீழே போடச் சொல்லிமாணவர்கள் மத்தியில் போய் உட்கார்ந்தார்.

மாணவர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்க சளைக்காமல் பதிலளித்தார்.

பின்னர் தேசத்துக்காக உழைப்போம், தேசத்துக்காக எதையும் செய்வோம் என்று அப்துல் கலாமுடன் சேர்ந்துமாணவர்களும் ஆசிரியர்கள் உணர்ச்சி பொங்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்துல் கலாமிடம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆட்டோகிராப் கேட்டு வாங்கினர். அனைவருக்கும்கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினார் கலாம்.

அப்துல்கலாமை பார்த்து பள்ளி மாணவ- மாணவிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+