தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது: கர்நாடகம்
பெங்களூர்:
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.
பா.ம.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள குழுவை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கிருஷ்ணராஜ சாகர் அணையில் 73 அடி தான் தண்ணீர் உள்ளது. இது எங்களுக்கே போதாது.
ஆனால், எங்களுக்கு நெருக்குதல் தர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த விஷயத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், கர்நாடதத்தில் போதிய அளவு மழைஇல்லை. இதனால் ஜூன் 16ம் தேதிக்குப் பின்னர் நீரை தமிழத்துக்கு தரவிலலை.
சட்டப்படி தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கை கர்நாடகம் தந்து தான் ஆக வேண்டும். ஆனால், மழை அளவைப்பொறுத்துத் தான் செய்ய முடியும். இந்த முறை கர்நாடகத்தில் சரியாக மழை பெய்யவில்லை.
இதனால் எங்கள் அணைகளிலேயே போதிய அளவு தணணீர் இல்லை. தண்ணீர் கேட்டு மாண்டியா, மைசூர்மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நாங்களே என்ன செய்வது என்றுதெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம்.
காவிரி ஆணையத்தில் இருந்து தமிழகம் விலகியிருக்க வேண்டாம். ஆனால், விலகுவதாக அவர்கள் கொள்வதாககூறியுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணா.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து முழுவிவரம் தெரியும் முன் கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இந்தமுடிவு குறித்த விவரத்தை எனது பாசனத்துறை செயலாளரிடம் கேட்டுள்ளேன் என்றார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசுவீர்களா என்று கேட்டபோது, அப்படி ஏதும்என்னிடம் திட்டமில்லை என்றார்.
தமிழக விவசாயிகள் எச்சரிக்கை:
இதற்கிடையே காவிரியில் தண்ணீர் கிடைக்க தமிழக அரசு வழி செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக காவிரிப் பாசன விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்காக வரும் ஜூலை 1ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில்போராட்டத்துக்கான நாள் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தமிழகஇதுவரை சந்தித்திராத மிகப் பெரிய போராட்டமாக இருக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதனால் தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்ட நிர்வாகங்கள் பெரும் கவலையடுத்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications