காவிரியை வைத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க அதிமுக திட்டம்: திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயத் தொழிலாளர்களுக்கு மறு வேலை வாய்ப்பு என்ற பெயரில் அதிமுகவினருக்கு வேலை வாய்ப்புத் தந்துகோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க முயற்சி நடப்பதாக திமுக கூறியுள்ளது.

காவிரியில் நீர் விட கர்நாடகம் மறுத்துவிட்டதால் நெல் பயிரிட முடியாத நிலைக்கு விவசாயிகள்தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் தவிர இந்தப் பகுதியில் வேறு வேலை வாய்ப்பு ஏதும் இல்லாததால் கூலி வேலைதேடி ஊர்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இவர்களுக்கு அங்கேயே வேறு வேலை வாய்ப்பு தருவதற்காக ரூ. 164 கோடியில் திட்டங்களை அறிவித்தார்முதல்வர் ஜெயலலிதா. ஆனால், இதில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியால் ஏற்கனவேநடத்தப்பட்டு வருபவை.

அவற்றின் பெயர்களை மாற்றி ஏதோ புதிய திட்டம் போன்ற தோற்றத்தை ஜெயலலிதா உருவாக்குவதாக பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதே கருத்தை திமுகவும் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்பு மற்றும் ஏமாற்றுவேலை என்று கூறியுள்ள திமுக விவசாயப் பிரிவின் செயலாளர் கே.பி. ராமலிங்கம், இந்தத் திட்டங்கள் மூலம்அதிமுகவினருக்கு கொள்ளையடிக்க புதிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுகவினருக்காக இந்தத் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் விவசாயிகள் என்ற பெயரில்அதிமுகவினருக்கு நியமன சான்றிதழ்களை வழங்கி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கப்போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயரைச் சொல்லி ஏமாற்றுவேலையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. பட்டினிச் சாவுகளை எதிர் கொண்டுள்ள விவசாயிகளுக்குஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப் பொறி மாதிரி அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+