காவரியில் நீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவ ரூ. 164 கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர்:
காவிரியில் தண்ணீர் இல்லாததால் வேலை வாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானவிவசாயிகளுக்கு ரூ.164 கோடியில் உதவித் திட்டங்கள் அமலாக்கப்படவுள்ளன.
அதே போல கடன்களை திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் மீது எடுக்கப்பட்டு வரும் ஜப்தி நடவடிக்கையைஉடனடியாக நிறுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று தஞ்சாவூரில் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் நிலைமையை ஆராய்ந்த முதல்வர் ஜெயலலிதா இந்தஅறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம்:
தண்ணீர் இல்லாததால் சுமார் 10 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. இவர்கள் கூலி வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர்மாவட்டங்களில் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்துக்காக உடனடியாக ரூ. 31.18 கோடி ஒதுக்கப்படுகிறது.கண்மாய்கள் தூர் எடுத்தல், புதிய கதிரடிக்கும் களங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் செயல்படுத்தப்படும்.
இந்த வேலைகளில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு தினக் கூலி வழங்கப்படும்.
இது தவிர சிறிய மீன்பிடி கண்மாய்கள் தோண்டுதல் ஆகிய பணிகளும் விவசாயத் தொழிலாளர்களைக் கொண்டுசெயல்படுத்தப்படவுள்ளன.
அதே போல ஏரிகள், கண்மாய்களில் பரவிக் கிடக்கும் காட்டு ஆமணக்கு தாவரங்கள அற்றப்படும். இந்தவேலையில் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக ரூ. 2 கோடி செலவிடப்படும்.
இந்தத் திட்டங்கள் மூலம் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒருவருக்காவது வேலை கிடைக்கஏற்பாடு செய்யப்படும்.
இதன் மூலம் வேலைக்கு அமர்த்தப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 54 கூலியாகவழங்கப்படும். இதில் 5 கிலோ அரிசியாகவும் மீதம் பணமாகவும் வழங்கப்படும் என்று ஜெயலலிதாவின்அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவசாயத் தொழிலாளர்கள் மூன்று வேலை உணவுக்காக மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரவேண்டிய அவல நிலை ஏற்படுவதை ஓரளவு தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications