காஷ்மீரை பிரிப்பதா?: வி.எச்.பிக்கு காங்கிரஸ் கண்டனம்
டெல்லி:
காஷ்மீர் மாநிலத்தை மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் நான்காக பிரிக்க வேண்டும் என்ற விஸ்வ ஹிந்துபரிஷத்தின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக ஹரித்வாரில் நடந்த வி.எச்.பியின் கூட்டத்தில் காஷ்மீரை 4 ஆகப் பிரிக்க வேண்டும்.லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அயோத்திவிவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்றும் வி.எச்.பி. அறிவித்தது.
காஷ்மீரை மதத்தின் அடிப்படையில் பிரிக்கக் கோரும் வி.எச்.பியின் இந்தத் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறுகையில்,
மதத்தின் அடிப்படையில் நாட்டைத் துண்டாக்கும் வி.எச்.பியின் முதல் முயற்சி இது என்று தான் தோன்றுகிறது.ஏற்கனவே சிக்கலில் உள்ள அந்த மாநிலத்தை மதத்தின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும்சிதைக்கக் கோர வி.எச்.பிக்கு எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை.
அவர்களுக்கு காங்கிரஸ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. அதே போல காஷ்மீருக்கு சுயாட்சி வேண்டும்என்று அம் மாநில முதல்வர் பரூக் அப்துல்லா இப்போது கூறுகிறார். சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அவர்இவ்வாறு பேசி வருகிறார் என்றார் சர்மா.












Click it and Unblock the Notifications