புலிகள் மீது தாக்குதல்: விசாரணை கமிஷன் நியமனம்
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே உள்ள வேலனையில் 2 விடுதலைப்புலிகள் தாக்கப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக ஒருவிசாரணைக் கமிஷனை இலங்கை அரசு நியமித்துள்ளது.
கெய்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருவரையும்கடந்த வியாழக்கிழமை ஒரு கும்பல் பயங்கரமாகத் தாக்கியது.
பின்னர் அந்த இரண்டு புலிகளையும் கடத்திச் செல்லவும் அந்தக் கும்பல் முயற்சித்தது. ஆனால் அப்பகுதிகிராமத்தினர் அந்தக் கும்பலை அடித்து விரட்டி விட்டனர்.
இலங்கைக் கடற்படை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த சிலர் தான் முகமூடி போட்டுக் கொண்டு வந்து இவர்களைத்தாக்கியதாகப் புலிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவினர் முதற்கட்டவிசாரணையை நடத்தி முடித்து விட்டனர்.
அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசு இன்று ஒரு விசாரணைக் கமிஷனைஅமைத்துள்ளது.
அரசு சார்பில் ஒரு அதிகாரி, புலிகளின் பிரமுகர் ஒருவர் மற்றும் இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவைச்சேர்ந்த ஒருவர் ஆகியோர் இந்தக் கமிஷனில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அடுத்த 14 நாட்களுக்குள் இந்த கமிஷன் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்றும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தவிர இந்தத் தாக்குதலை உண்மையிலேயே கடற்படை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த சிலர் தான்நடத்தினார்களா என்பது குறித்து விசாரிப்பதற்காக இலங்கை ராணுவமும் ஒரு தனிக் குழுவை நியமித்துள்ளது.
இந்நிலையில் திரிகோணமலை மாவட்டம் முட்டூரில் உள்ள புலிகளின் அரசியல் அலுவலகத்தை சர்வதேசதீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் "ஒசாமா விங்" என்ற தற்கொலைப் படையினர் கடந்த சனிக்கிழமைதாக்கினர்.
அந்த அலுவலகத்தை உடைத்துக் கொண்டு புகுந்த கும்பல் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை எல்லாம் உடைத்துத்தள்ளியது. தாக்குதல் நடந்த போது அந்த அலுவலகத்தில் யாரும் இருக்கவில்லை.
திரிகோணமலையில் பந்த்:
இதற்கிடையே புலிகள் மீதும் புலிகளின் அலுவலகம் மீதும் நடந்த தாக்குதல்களைக் கண்டித்து திரிகோணமலைமாவட்டம் முழுவதும் இன்று முழு வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப்போக்குவரத்தும் நடைபெறவில்லை.
திரிகோணமலை நகரின் பல பகுதிகளிலும் பேரணிகள் மற்றும் கண்டனக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications