இலங்கை: "அமைதிப் பேச்சு முயற்சியில் பாதிப்பில்லை"
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் எந்த விதமான தடங்கல்களும்ஏற்பட்டிருக்கவில்லை என்று இலங்கை அரசு தெளிவாகக் கூறியுள்ளது.
அமைதிப் பேச்சுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாததைத் தொடர்ந்து, இலங்கை அரசின் முயற்சிகளில் பலமுட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இதைக் கடுமையாக மறுத்த இலங்கை அரசியல் விவகாரத்துறை அமைச்சர் பெய்ரிஸ், எந்த விதமான இடையூறும்இல்லாமல் அமைதிப் பேச்சுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் வெகு மும்முரமாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.ஆனால் இது போன்ற அறிவிப்புகளை எல்லாம் இப்போதைக்கு வெளிப்படையாகக் கூற முடியாது என்றும்பெய்ரிஸ் கூறினார்.
நடைபெறவிருக்கும் இந்த அமைதிப் பேச்சு வெகு முக்கியமானது மட்டுமல்ல. கொஞ்சம் சிக்கலானதும் கூட.எனவே படு எச்சரிக்கையுடன் தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால்தாமதம் ஏற்படுவது இயல்புதான் என்றும் விளக்கமளித்தார் பெய்ரிஸ்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தங்களில் சிலவற்றை நிறைவேற்றாதது குறித்து புலிகள் அளித்துள்ள புகார்களையும்மறுத்த பெய்ரிஸ், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளுக்கு அனைத்து வகையான மக்களும் தொடர்ந்துஅளித்து வரும் ஆதரவு பற்றியும் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த ஆண்டு அதல பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் இந்தஆண்டு நல்ல வளர்ச்சியடைந்துள்ளதாகவும் பெய்ரிஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications