காவிரி: கர்நாடக முதல்வரை சந்திக்கிறது தமிழக காங்கிரஸ் குழு
சென்னை:
காவிரியில் நீர் வழங்கக் கோரி தமிழக காங்கிரஸ் கட்சியின் குழு கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை இருதினங்களில் சந்தித்துப் பேச்சு நடத்தும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் இன்று பேசிய அவர்,
காவிரிப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் வெறும் கண்துடைப்பாகத் தான் உள்ளன. இந்தப்பிரச்சனை தொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள எந்த ஒரு அமைச்சரும் உருப்படியான யோசனையைத் தரபோவதில்லை. அப்படியே அவர்கள் தப்பித் தவறி ஏதையாவது உருப்படியாக பேசிவிட்டாலும் அதை ஜெயலலிதாஏற்கப் போவதில்லை.
இதனால் அமைச்சரவைக் கூட்டம், மறு வேலை வாய்ப்புத் திட்டங்கள் போன்றவை எல்லாமே வெறும்கண்துடைப்புகள் தான்.
இந்த விவகாரத்தில் மெத்தனப்போக்கைக் கடைபிடிக்காமல் ஜெயலலிதா உடனடியாக கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேச வேண்டும். அதனால் பலன் கிடைக்காவிட்டால் அனைத்துக் கட்சியினரைஅழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்.
எங்கள் கட்சியின் குழு 2 நாட்களில் கர்நாடக முதல்வரைச் சந்தித்து காவிரியில் நீர் விடுமாறு கோரிக்கை விடுக்கும்என்றார் இளங்கோவன்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications