சேலம் போலீசின் இரண்டு முகங்கள்
சேலம்:
சேலத்தில் ரடிகளைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் குற்றங்களின் தலைநகராக சேலம், தர்மபுரி பகுதிகள் மாறி வருகின்றன.
தினந்தோறும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், வழிப்பறிகள் என இந்தப் பகுதியில்சட்டவிரோத செயல்கள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகின்றன.
இது தவிர கட்டப் பஞ்சாயத்து கும்பல்கள் தனியாக காவல் நிலையங்களையே நடத்தி வருகின்றன. எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் அதில் தாங்களாகவே வந்து தலையிட்டு இரு தரப்பினருடனும் பணம் பறித்துவருகின்றன இந்தக் கும்பல்கள்.
நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த காவல்துறை தலைமையகம் சேலம் போலீசாருக்கு கடும் டோஸ்விட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களில் சுமார் 60 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
கட்டப் பஞ்சாயத்து செய்வது, மிரட்டி பணம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் குறித்துபோலீசாருக்குத் தெரிவிக்க தனி போன் நம்பர்களையும் காவல்துறை ஒதுக்கியுள்ளது.
இது குறித்து போலீஸ் துணை ஆணையர் மாஹாலி கூறுகையில்,
புகார் கூற விரும்புவோர், 416900, 211998, 411131 ஆகிய எண்களில் சேலம் தனிப் படை போலீசாரிடம் புகார்கூறலாம். 24 மணி நேரமும் இந்த தொலைபேசிகளில் புகார்கள் வாங்கப்படும்.
புகார் சொல்பவர்களின் பெயர், விலாசம் ரகசியமாக வைக்கப்படும். பெயரைக் கூற விரும்பாவிட்டாலும்பரவாயில்லை புகார் கூறலாம் என்றார்.
பள்ளி மாணவியை கற்பழிக்க முயற்சி:
இந் நிலையில் சேலத்தில் ஒரு பள்ளி மாணவியை கற்பழிக்க முயற்சி நடந்தது.
ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த மீனா என்ற அந்த 14 வயது மாணவியை அதே ஊரைச் சேர்ந்த அங்கப்பன், முருகன்,செல்வம் ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்திச் சென்றனர்.
காட்டுப் பகுதியில் வைத்து கற்பழிக்க முயன்றபோது அவர்கள் தாக்கியதில் மயங்கி விழுந்தார். அவளஇறந்துவிட்டதாகக் கருதிய மூவரும் அவளை அங்கேயே விட்டுவிட்டு ஓடினர்.
இது குறித்து தனது பெற்றோரிடம் அவர் கூற ஏழைகளான அவர்கள் வசதி மிக்க 3 பேரின் குடும்பத்துடனும் மோதமுடியாது என்பதால் என்ன செய்வது எனறு தெரியாமல் தவித்து வந்தனர்.
இந் நிலையில் மறுநாள் கோவிலுக்குச் சென்ற மீனாவை வழிமறித்த 3 பேரும் அவளை மீண்டும் கடத்திச் சென்றுதனி அறையில் பூட்டினர். இது குறித்து தெரியவந்தவுடன் அவளது உறவினர்கள் ஓடி வந்து அவளை மீட்டனர்.
ஆனால், இந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இவர்கள் மீது புகார் தர ஜலகண்டபுரத்துக்கு மீனாவின் பெற்றோர்சென்றபோது அப்புறம் வாங்க, பார்போம் என போலீசார் பதில் கூறினர்.
இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன் பின்னர் தான்அந்த ஸ்டேசன் போலீசார் வழக்கை பதிவு செய்தனர்.
வசதி மிக்க அந்த 3 பேரின் மீதும் இந்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்.
ஒரு பக்கம் மூத்த அதிகாரிகள் சட்ட விரோத செயல்களை அடக்க முயல்கின்றனர். மறுபுறம் லோக்கல் போலீசார்இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications