காவிரி நீர் கோரி கிருஷ்ணாவை வாசனும் சந்திக்கிறார்
சுந்தரப்பெருமாள்கோவில்:
காவிரியில் தண்ணீர் விடக் கோரி கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவைச் சந்திக்கச் செல்லும் காங்கிரஸ்எம்.எல்.ஏக்களுடன் தானும் செல்லப் போவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.
சுந்தரப்பெருமாள்கோவிலில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு அவர் நேற்று சென்றார். அவரை காங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் சந்தித்து கட்சிகள் இணைப்பு விழா குறித்து ஆலோசனைநடத்தினார்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய வாசன்,
காவிரி விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழகத்துக்கு கர்நாடக முதல்வர் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.
கட்சி பேதம் பார்க்காமல் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணாவையும்பிரதமரையும் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க வேண்டும்.
விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள்குழுவினர் கிருஷ்ணாவை சந்தித்துப் பேச முடிவெடுத்துள்ளனர். அவர்களுடன் நானும் பெங்களூர் சென்றுகிருஷ்ணாவைச் சந்தித்து நீரைத் திறந்து விட கோரிக்கை விடுப்பேன்.
கிருஷ்ணாவைச் சந்திக்க காங்கிரஸ் கட்சித் தலைமையின் அனுமதி பெறப்படும். இந்த விவகாரத்தில் முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ள உதவித் திட்டங்கள் தாற்காலிகமானவை. இதனால், விவசாயிகளின் பிரச்சனை தீரப்போவதில்லை. காவிரியில் நீர் வாங்குவது தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்றார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications