இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பான்பராக் லாபியால் பதவி இழந்த மத்திய அமைச்சர்
டெல்லி:
மத்தியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதால் 3 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பாரதீய ஜனதாவின் தலைவராக நியமிக்கப்பட்ட உள்ள வெங்கைய்யா நாயுடு தனது ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதே போல கட்சிப் பணிக்குத் திரும்ப உள்ள அருண் ஜேட்லி தனது சட்டத்துறை அமைச்சர் பதவியை விட்டுவிலகினார். இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் வாஜ்பாயிடம் ஒப்படைத்தனர்.
அமைச்சரின் பதவியை பறித்த அத்வானி:
இந் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சி.பி. தாக்கூரை பதவி விலகுமாறு துணைப் பிரதமராகபதவியேற்றுள்ள அத்வானி உத்தரவிட்டார். இதையடுத்து தாக்கூர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
சமீபகாலமாக தாக்கூருக்கும் விலங்குகள் நலத்துறை இணை அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே கடும்மோதல் நடந்து வந்தது. விலங்குகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக இருவரும்மோதினர்.
இதனால் இருவரின் பதவிகளையும் பறிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிலையில் தாக்கூரை மட்டும் ராஜினாமாசெய்யச் சொல்லியிருக்கிறார் அத்வானி.
பா.ஜ.க. அலுவலகம் மீது தாக்குதல்:
தாக்கூர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராவார். தாக்கூரை பதவி விலகச்சொன்னதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் பாட்னாவில் பாரதிய ஜனதா அலுவலகத்தைத் தாக்கினர்.நாற்காலிகளை தூக்கி தெருவில் வீசினர்.
பாட்னா ரயில் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பான்பராக் லாபி நெருக்குதலா?:
இந் நிலையில் தனது பதவி பறி போக பான்பராக், குட்கா தயாரிப்பாளர்கள் தான் காரணம் என்று தாக்கூர்கூறியுள்ளார். பான்பராக் போன்ற புகையிழை போதைப் பழக்கத்துக்கு எதிராக சில கடும் நடவடிக்கைகளைஎடுத்தார் தாக்கூர்.
பான்பராக் விற்பனைக்கும் சில இடங்களில் தடை விதித்தார். மார்வாடிகளான இதன் தயாரிப்பாளர்கள் பா.ஜ.க.அனுதாபிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் நெருக்குதல் காரணமாகவே தாக்கூரின் பதவி பறிபோயுள்ளது.
பிரதமரின் அதிகாரம் குறைப்பு: காங்
அத்வானி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துளளது.
அக் கட்சியின் செய்தித் தொட்பாளர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், இதன்மூலம் அத்வானிக்கு அதிகாரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றுகூறுவதைவிட பிரதமர் வாஜ்பாயின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது என்று சொல்வது தான் சரி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிற கட்சிகளை ஒடுக்கிவிட்டு பா.ஜ.க. தனது அதிகாரத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதை அக் கட்சிகள் உணர்ந்துகொள்வது நல்லது என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications