வைகோவுக்கு கருணாநிதி, ராமதாஸ் ஆதரவு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதா மிரட்டியுள்ளதற்குபல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், கடந்த ஆண்டு என்னை ஜெயலலிதா அரசு கைது செய்தது. அப்போது போலீஸாரின் பிடியிலிருந்துநான் விடுபட வேண்டி கதறியழுத காட்சி குறித்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட நன்றாக நடித்துள்ளதாக மதிமுகவைச் சேர்ந்தமத்திய அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அவர்கள் அளவுக்கு கல் நெஞ்சம் கொண்டவன் அல்ல நான். பொடா சட்டமானாலும் சரி, தடா சட்டமானாலும் சரி, அதை அரசியல்உள்நோக்கத்திற்காக பயன்படுத்துவதை திமுக ஆதரிக்காது.
இதே ஜெயலலிதா ஆட்சியின்போதுதான் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும், அவரது கணவர் ஜெகதீசனையும் போலீஸார் கைதுசெய்து ஒரு ஆண்டு சிறையில் வைத்திருந்தனர்.
எனவே, வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்யப் போவதாக இவர்கள் கூறியுள்ளது, இந்த ஆட்சியைப் பொருத்தவரைஆச்சரியமான விஷயமே அல்ல என்று கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோவை கைது செய்ய உள்துறை அமைச்சர் அத்வானி அனுமதிப்பாரா என்று கேட்டபோது, என்னால் யூகித்துபதில் சொல்ல முடியாது என்று கருணாநிதி பதிலளித்தார்.
வைகோவை கைது செய்தால் ஜெயலலிதாவை ஆதரித்து வரும் தி.க. தலைவர் கி.வீரமணியையும் இதே போலகைது செய்ய வேண்டும் அல்லவா என்று கேட்டபோது, எனக்குத் தெரியாது என்று கருணாநிதி பதில் தந்தார்.
பழ.நெடுமாறனையும் ஜெயலலிதா கைது செய்ய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கும், எனக்கு தெரியவில்லைஎன்று பதில் சொன்னார் கருணாநிதி.
ராமதாஸ் கண்டனம்:
ஜெயலலிதாவின் கைது எச்சரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவை ஜெயலலிதா மறுபரிசீலனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்புக்குஆதராவாக பேசுவதால் ஒருவரை கைது செய்துவிட முடியாது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது. இலங்கையிலேயே புலிகள் மீதானதடையை நீக்கப் போகிறார்கள்.
தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் கவனத்தை அரசின்தோல்விகளில் இருந்து திசை திருப்ப இந்த வேலைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார் என்ற ராமதாஸ் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications