வெங்காய மூட்டைக்குள் சாராய பாக்கெட்டுகளை வைத்து அமோக விற்பனை
சென்னை:
வெங்காயம் விற்பதாகக் கூறி கூடைகளில் வைத்து கர்நாடக சாராயத்தை விற்பனை செய்த "முட்டைக் கூடை"நாராயணன் என்ற வியாபாரியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை அருகே உள்ளது லட்சுமிபுரம். இது செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் வருகிறது. இங்கு "முட்டைக் கூடை"நாராயணன் என்பவர் வெங்காயம் விற்பதாக கூறி சாராயம் விற்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து சென்னை நகர போலீஸாரும், செங்கை மாவட்ட போலீஸாரும் இணைந்து நாராயணன் வீட்டில் திடீர்சோதனை நடத்தினர்.
ஆனால் போலீஸார் வரப் போவது குறித்து நாராயணனுக்குத் தகவல் வரவே அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த சோதனையின் போது போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வெங்காயம் வைக்கப்பட்டிருந்த 92கூடைகளில், 40,000 பாக்கெட் கள்ளச்சாராயம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும்கர்நாடகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
போலீஸார் விசாரணை நடத்தியபோது, கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விற்பதாக கூறி அக்கம் பக்கத்தில்உள்ளவர்களை நாராயணன் ஏமாற்றி வந்துள்ளார். வெங்காயக் கூடைகளில் சாராய பாக்கெட்டுக்களைப் போட்டுவிற்பனை செய்துள்ளார்.
இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் இருந்துள்ளார். ஐந்து வழக்குகளும் இவர் மீதுஉள்ளன.
தலைமறைவாகி விட்ட நாராயணனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications