தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
சென்னை:
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள்பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று சமீபத்தில் மத்தியஅரசு அறிவித்தது.
இதையடுத்து கடந்த ஒரே மாதத்தில் (ஜூன்) 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைஉயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும்உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களுக்கு மறு விற்பனை வரியை தமிழக அரசு அதிகப்படுத்தியுள்ளதன் காரணமாக நேற்றுநள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்தெரிவித்தனர்.
சென்னையில் பெட்ரோல் விலை 34 காசு உயர்ந்தால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 31.64ஆகியுள்ளது. அதே போல் டீசல் விலை 18 காசு அதிகரித்து ரூ.20.06ஆக உள்ளது.
அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுவதால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில்உள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications