சென்னையில் பயங்கர தீ: 600 குடிசைகள் எரிந்து நாசம்
சென்னை:
சென்னை அண்ணாசாலைப் பகுதியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் சுமார் 600 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
அண்ணாசாலையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நகர் மற்றும் சேவியர் நகர் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்டகுடிசைகள் உள்ளன.
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் ஒரு குடிசையில் சமையல் செய்யும் போது அடுப்பிலிருந்து கிளம்பிய ஒருதீப்பொறி அந்தக் குடிசையின் கூரையில் தெறித்து விழுந்ததில் அந்தக் குடிசை பற்றி எரிய ஆரம்பித்தது.
அப்போது பலமான காற்றும் வீசிக் கொண்டிருந்ததால், தீ மளமளவென்று மற்ற குடிசைகளுக்கும் பரவஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 600 குடிசைகளிலும் தீ பிடித்துக் கொண்டது.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.ஆனால் அதற்குள் 600க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகி விட்டன.
இந்தத் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 18 பேர் தீக்காயமடைந்துமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம், சென்னை மாநகர மேயராகப் பொறுப்பு வகிக்கும் "கராத்தே"தியாகராஜன் மற்றும் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷ்னர் விஜயகுமார் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தைநேரில் பார்வையிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் வேஷ்டி,சேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் குடிசைகள் கட்டித்தரப்படும் என்றும் தளவாய் சுந்தரம் கூறினார்.
இதற்கிடையே சென்னையின் முக்கியமான அண்ணாசாலை அமைந்துள்ள பகுதியில் தீப்பிடித்ததால் அங்கு ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications