ஆகஸ்டு 14ல் காங்கிரஸ்-தமாகா இணைப்பு
டெல்லி:
காங்கிரசுடன் தமாகாவை இணைக்கும் விழா வரும் ஆகஸ்டு 14ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று அகிலஇந்திய காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
முதலில் ஜனாதிபதி தேர்தலையொட்டி இணைப்பு விழா ஜூலை 15ம் தேதியிலிருந்து ஆகஸ்டு 1ம் தேதிக்குமாற்றப்பட்டது.
பின்னர் வேறு சில காரணங்களுக்காக ஆகஸ்டு 12ம் தேதி இணைப்பு விழா நடைபெறும் என்றுதெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தத் தேதியில் தான் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் தான் இதுஅறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணைப்பு விழா மீண்டும் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ரமேஷ் சென்னிதாலா, ஆகஸ்டு 14ம் தேதி இணைப்பு விழாநடைபெறும் என்றும் இணைப்பு விழா நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் கூறினார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரிடம்தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னிதாலா கூறினார்.
ஆகஸ்டு 14ம் தேதி காலை காங்கிரஸ் கட்சியுடன் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி இணைப்பு விழாநடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அங்கிருந்து நேராக மதுரை சென்றுகாங்கிரஸ்-தமாகா இணைப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications