நோயாளிகளிடம் அன்பு காட்டுங்கள்: டாக்டர்களுக்கு அமைச்சர் கோரிக்கை
சென்னை:
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், தங்களிடம் வரும் ஏழை நோயாளிகளிடம் சிடுசிடு எனஇருக்காமல் இன்முகத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலைகூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் நடந்த செரிமானத் துறை கருத்தரங்கில் கலந்து கொண்டுசெம்மலை பேசுகையில்,
சென்னையில் உள்ள புறநகர் மருத்துவமனைகளை சீர் செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.சென்னையில் மொத்தம் 4 புறநகர் மருத்துவமனைகள் உள்ளன. இங்கு காலியாக உள்ளடாக்டர் இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
அரசு மருத்துவமனைகளில் சில டாக்டர்கள் தங்களிடம் வரும் ஏழை நோயாளிகளிடம் கடு கடுவென நடந்துகொள்கிறார்கள். இது மனதுக்கு வேதனையளிக்கிறது. இதே டாக்டர்கள், தங்களது சொந்த கிளினிக்கிற்கு வரும்நோயாளிகளிடம் புன்முறுவலுடன் நடந்து கொள்கிறார்கள்.
டாக்டர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு உள்ளது. அவர்களுக்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதைகிடைக்கிறது. தங்களை அப்படித் தாங்கும் சமுதாயத்திற்கு டாக்டர்கள் என்ன கைமாறு செய்யப் போகிறார்கள்?
சிகிச்சை வரும் நோயாளிகள் ஏழைகளாக இருந்தாலும் பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களை ஒரேமாதிரியாக பாவித்து அன்புடன் நடந்து காள்ள டாக்டர்கள் முன்வர வேண்டும்.
அப்படி நடப்பதால் அந்த நோயாளியிடமிருந்து கிடைக்கும் வாழ்த்து எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதற்குஈடாகாது என்றார் அமைச்சர் செம்மலை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications