கராத்தேவுக்கு எதிரான வழக்கு: இன்று மாலை தீர்ப்பு
சென்னை:
சென்னை மேயருக்குரிய கார் மற்றும் கொடியைப் பயன்படுத்தியதைக் கண்டித்து துணை மேயரான கராத்தேதியாகராஜனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி, தமிழக அரசின் சட்டத்தால் பறி போயுள்ளது. இந்த நிலையில்,ஸ்டாலின் பதவி பறிக்கப்படக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தச்சட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்த போதிலும் மேயர் பதவி காலியாக வைக்கப்பட வேண்டும் என்றும் இறுதித்தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராகப் பதவியேற்று மேயர் இருக்கையில்அமர்ந்து மேயருக்குரிய பணிகளை செய்ய ஆரம்பித்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அவமதித்து விட்டதாக கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்கள் மீதுஉதயக்குமார் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது கராத்தே தியாகராஜனை நீதிபதிகள் மிகவும் கண்டித்துப் பேசினர்.
இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு வருவதற்குள் என்ன அவசரம், அதற்குள் யார் மேயராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்கள் என்பதிலிருந்து பதவி சுகத்திற்கு அலைவதை விட்டுவிட்டு மக்கள்பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது வரை கராத்தே தியாகராஜனை நீதிபதிகள்மிகவும் கண்டிப்புடன் பேசினர்.
இந்நிலையில் இவ்வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது.
அப்போது ஒரு சிறப்பு மனுவைத் தாக்கல் செய்த தியாகராஜனின் வழக்கறிஞரான ராமானுஜம், மேயர்கொடியையோ மேயருக்கான காரையோ கராத்தே தியாகராஜன் பயன்படுத்தவே இல்லை என்று கூறினார்.
ஆனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் இன்றும் கராத்தே தியாகராஜனுக்குநீதிபதிகள் சராமாரியாக "அர்ச்சனைகளை" வழங்கினர்.
மேயர் இல்லாததால் மேயர் பொறுப்பில் இருந்து கொண்டு கோப்புகளில் வெறுமனே கையெழுத்துப் போடலாமேதவிர, மேயருக்குரிய முழு அதிகாரங்களைப் பயன்படுத்துவதோ அவருடைய காரையும் கொடியையும்பயன்படுத்துவதோ கூடாது என்று இன்று நீதிபதிகள் கூறினர்.
அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் எழுந்து, மேயர் கொடி மற்றும் கார் பயன்படுத்தப்பட்டதுகுறித்து இப்போது வழக்காட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவருக்கும் ஒரு "சூடு" கொடுத்து நீதிபதிகள் அவரை உட்கார வைத்தனர். மக்கள் பிரச்சனை தொடர்பானவிவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு எங்களுக்கு அதிகாரங்கள் உண்டு. எப்போது வேண்டுமானாலும் நாங்கள்அதைப் பற்றிப் பேசுவோம் என்று சந்திரனுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
பின்னர் மீண்டும் கராத்தே தியாகராஜன் குறித்துப் பேசிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பே இன்னும் அளிக்கப்படாதநிலையில் ஆடம்பரம் தேவைதானா என்று கூறினர்.
பின்னர் இன்று மாலை இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி சுபாஷன் ரெட்டியும் நீதிபதி முருகேசனும்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications