புலிகள் வரி விதிப்புக்கு சந்திரிகா எதிர்ப்பு
கொழும்பு:
வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் தனியாக வரி விதித்திருப்பதை அந்நாட்டு அதிபர்சந்திரிகா குமாரதுங்கா கண்டித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வரி வசூல் செய்வதற்கு புலிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாதுஎன்றும் அதிபர் அலுவலகம் இதைக் கண்டுகொள்ளப் போவதில்லை என்றும் அதிபரின் செய்தித் தொடர்பாளரானஹரிம் பெய்ரிஸ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
புலிகளின் இந்தப் போக்கால் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் இதன் மூலம்பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் புலிகள் மீறியுள்ளதாக பெய்ரிஸ்கூறினார்.
இந்த வரி விதிப்பு தொடர்பாகத் தான் கடந்த வாரம் வடக்கு இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும்இடையில் பெரும் வன்முறை மூண்டது என்று குற்றம் சாட்டிய பெய்ரிஸ், இதை பாதுகாப்புத்துறை அமைச்சரும்உள்துறை அமைச்சரும் இதில் தலையிட வேண்டும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக புலிகளின் மீது ராணுவ ரீதியிலான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா என்று ஒரு நிருபர்கேட்டதற்கு, இதுபற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் மட்டும் சந்திரிகா தெரிவிப்பார் என்றும் அமைதிமுயற்சிகளைக் குலைக்கும் விதத்தில் அவர் நடந்து கொள்ள மாட்டார் என்றும் பெய்ரிஸ் பதிலளித்தார்.
சந்திரிகா மீது ஊழல் புகாரா?
இதற்கிடையே சந்திரிகா மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்களையும் பெய்ரிஸ் கடுமையாக மறுத்தார்.
பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகளுக்கான மோட்டார் சைக்கிள்கள், குண்டு மற்றும் வெடிகுண்டு துழைக்காதஉடைகள் உள்பட பல்வேறு பொருட்கள் வாங்கியதில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளதைச் சுட்டிக் காட்டிசந்திரிகாவை அதிபர் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முயற்சித்து வருவதாகசமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நிருபர்கள் கேட்ட போது,
எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சந்திரிகா மீது இந்தப் புகார்கள் எழுந்துள்ளன. ரணில்தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தான் இது போன்ற உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருகிறது.
அந்தப் பொருட்களை வாங்கியதில் எந்த ஊழலும் நடைபெற்றிருக்கவில்லை. அவை முறைகேடாகவும்பயன்படுத்தப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications