விமானத்தில் கோளாறு: தாமதமாய் சென்னை வந்த வைகோ
சென்னை:
வைகோ சென்னை வர இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திட்டமிட்டபடி பகல் 1மணிக்கு சென்னை வர முடியவில்லை. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மாலை 4.35 மணிக்குத் தான் சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தார்.
வைகோவைக் கைது செய்ய காலையிலேயே போலீஸ் படை காலையிலேயே சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்முற்றுகையிட்டு விட்டது.
சிகாக்கோவில் இருந்து அவர் சென்னைக்கு வர ஏர்-இந்தியா விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தார். இந்த விமானம் நேற்றிரவு மும்பைவந்தது. அங்கிருந்து இன்று காலை 11.30 ஏர்-இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு 1.50 மணிக்கு சென்னை வர இருந்தார்.
ஆனால், இந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அவர் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 2.45 மணிக்குமும்பையில் இருந்து புறப்பட்டார். இது மாலை 4.35 மணிக்கு சென்னை வந்தது.
நீண்ட நாள் வெளிநாட்டுப் பயணத்துக்குப் பின்னர் அவர் வருவதால் அவரை வீட்டுக்குப் போகவிட்டு வீட்டினரை சந்தித்த பின்னர் கைதுசெய்யலாமா என்று காவல்துறையினர் யோசித்தனர். ஆனால், மும்பையில் இருந்து வரவே மிகவும் தாமதமாகிவிட்டதால் அவரை விமானநிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர்.
மதிமுக தொண்டர்களை விமான நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்துக்குவரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனையிட்டனர்.
மதிமுகவினர் வரும் கார்கள், வேன்கள் ஆகியவை வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டன. விமான நிலையத்தில் பெரும் அளவிலானபோலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சாதாரண உடையிலும் ரகசிய போலீசார் சுற்றி வந்தவணணம் இருந்தனர்.
மத்திய அமைச்சர்களான கண்ணப்பன், பொன்னுசாமி ஆகியோர் முன்பே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் விமான நிலையத்தில்வைகோவின் வருகைக்காக காத்திருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications