வைகோவை கைது செய்ய மதுரை போலீஸ் படை சென்னை வந்தது: அதிகாரிகளுடன் ஜெ. ஆலோசனை
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்படுகிறார். இதற்காக மதுரை மாவட்ட போலீஸ் தனிப் படை சென்னைவந்துள்ளது.
மதுரை ஊரக மாவட்ட எஸ்.பி. ஆயுஷ்மணி திவாரி தலைமையிலான போலீஸ் படையினர் கார்கள், வேன்கள் மூலம் நேற்றிரவு புறப்பட்டுஇன்று அதிகாலை சென்னை வந்தனர்.
சென்னையில் இந்தப் படையினர் தான் வைகோவைக் கைது செய்வர்.
இந் நிலையில் வைகோவை கைது செய்வது குறித்தும், அதன் பின்னர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை பராமரிப்பது குறித்தும்நேற்று மாலை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
கோட்டையில் நடந்த இந்ததக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா, காவல்துறைடி.ஜி.பி. நெயில்வால், பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, உளவுப் பிரிவு ஐ.ஜி. வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் வைகோவை சென்னையில் வைத்தே கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரை விமான நிலையத்தில் கைதுசெய்வதைவிட வீட்டில் வைத்து கைது செய்யலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 10 நாட்களாக வெளிநாட்டில் இருந்துவிட்டு வரும் அவர் தனது குடும்பத்தினரை சந்தித்த பின்னர் கைது செய்யலாம் என்றும்முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் தடுப்புகள்வைக்கப்பட்டு மதிமுக தொண்டர்கள் விமான நிலையத்துக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications