வைகோ விவகாரம்: நாடாளுமன்றத்தில் அதிமுக- பா.ஜ.க. மோதல்
டெல்லி:
வைகோ கைது செய்யப்பட்ட விவகாரம் இன்று லோக்சபாவிலும் எதிரொலித்தது.
நேற்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டம் ஜனாதிபதி தேர்தலையொட்டி உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று அவை கூடியதும் காஷ்மீரில் நடந்த அப்பாவிகள் கொலை குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய துணைப் பிரதமர் அத்வானிஎழுந்தார். ஆனால், மதிமுக எம்.பிக்களும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள், மகாராஷ்டிர மாநிலதாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.பியான ராம்தாஸ் அத்வாலே எழுந்து வைகோ கைது விவகாரத்தைக் கிளப்பினர்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். அவர்ளுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள்குரல் கொடுத்தனர். இதையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் சபாநாயர் மற்றும் அமைச்சர் பிரமோத் மகாஜனின் கோரிக்கையால் அமைதி ஏற்பட்டது. இந்த விவகாரத்தை நாளைவிவாதிக்கலாம் என சபாநாயகர் கூறினார்.
இதன் பின்னர் காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்தின் மீதுவிவாதம் நடந்தபோது பேசிய அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியன் சம்பந்தம் இல்லாமல் வைகோ விவகாரத்தை இழுத்தார்.
இதையடுத்து அவருக்கும் பா.ஜ.க. எம்.பிக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாண்டியன் பேசுகையில், சட்டத்தை உருவாக்குபவர்கள் (மத்திய அரசு) முதலில் அதை மதிக்க வேண்டும். தீவிரவாதம் எங்குநடந்தாலும் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். சட்டத்தை யாராக இருந்தாலும்.. எம்.பியாகவே (வைகோ) இருந்தாலும் மதிக்கவேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு. அதை யாரும் ஆதரிக்கக் கூடாது என்றார்.
அப்போது பா.ஜ.க., மதிமுக எம்.பிக்கள் எழுந்து பாண்டியனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். காஷ்மீரில் அப்பாவிகள்கொல்லப்பட்டது குறித்து விவாதிக்கும்போது இடையில் தொடர்பே இல்லாத விவகாரத்தைப் பற்றி பாண்டியன் பேசுகிறார் எனகுற்றம் சாட்டினர்.
பல தரப்பில் இருந்தும் எம்.பிக்கள் பாண்டியனை நோக்கி எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். உடனே கடுப்பாகிப் போன பாண்டியன்,ஒரு சட்டத்தில் (பொடா) உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் அந்த சட்டத்தை நீக்கிவிட வேண்டும். ஆனால், சட்டம் அமலில்இருக்கும் வரை அதை நாம் ஆதரித்துத் தான் ஆக வேண்டும் என்று கோபமாகக் கூறினார்.
உடனே பா.ஜ.க. எம்.பிக்கள், இப்போது அவையில் இல்லாத ஒரு எம்.பியைப் (வைகோ) பற்றி பாண்டியன் பேசுவது முறையல்லஎன்றனர். இதற்கு பதிலளித்த பாண்டியன், நான் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றார்.
ஆனால், பா.ஜ.கவினரும் மதிமுகவினரும் கொடுத்த சவுண்டில் அடங்கிய பாண்டியன் தனது உரையை மாற்றிக் கொண்டு காஷ்மீர்பற்றி பேச ஆரம்பித்தார்.
முன்னதாக காஷ்மீர் விவாதம் தொடங்கிய போது மதிமுக எம்.பிக்கள், முலாயம் சிங் யாதவ், ராம்தாஸ் அத்வாலே ஆகியோர்இடை மறித்தனர். வைகோ விவகாரம் குறிதது பேச வேண்டும் என்றும் பொடா சட்டத்தை எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் மனோகர் ஜோஷி, இந்த விவகாரம் குறித்து நிச்சயம் விவாதிக்க அனுமதி தருவேன். ஆனால்,இப்போது துணைப் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். இது பொதுக் கூட்ட மேடை அல்ல, எனதுபொறுமைக்கு அளவுண்டு என்றார்.
இதையடுத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் மதிமுக எம்.பிக்களிடம் சென்று அவர்களைஅமைதிப்படுத்தினார். இதையடுத்து அத்வாலே அமர்ந்தார். மதிமுகவினரும் அமர்ந்தனர்.
வைகோ கைது குறித்து நாளை விவாதம் நடக்கும் என்று தெரிகிறது.
முலாயம் சிங் யாதவ் கண்டனம்:
முன்னதாக நாடாளுன்றத்துக்குள் நுழைவதற்கு முன் நிருபர்களிடம் பேசிய சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்கூறுகையில்,
வைகோ கைதில் பொடா சட்டம் மிகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோதே அதை வேண்டாம் என்று தலையில் அடித்துக் கொண்டோம். ஆனால்,இவர்கள் கேட்கவில்லை. இப்போது முதலில் மத்திய அரசு மன்னிப்பு கேட்டுவிட்டு இந்தச் சட்டத்தை வாபஸ் பெற ண்ேடும்.
வைகோன் கைது மூலம் பொடா எவ்வளவு மோசமான, தவறாக பயன்படுத்தத்தக்க சட்டம் என்பது தெளிவாகிவிட்டது என்றார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications