தீவிர போர் ஒத்திகையில் பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்துஇரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து கடந்த ஏழு மாதங்களில் மூன்றாவது முறையாக எல்லையில் போர் மேகங்கள் சூழ ஆரம்பித்துள்ளன.
இந்திய நாடாளுமன்ற தாக்குதல்:
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதையடுத்துஎல்லையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே எந்த நேரமும் போர் வெடிக்கலாம்என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் விரைந்துபோரைத் தவிர்க்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதையடுத்து போர் பயம் ஓரளவுக்குத் தணிந்தது.
ராணுவ முகாம் மீது தாக்குதல்:
ஆனால் கடந்த மே 14ம் தேதி ஜம்மு அருகே ராணுவ முகாமையும் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருபஸ்சையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கரமாகத் தாக்கியதில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடையகுடும்பத்தினர் உள்பட 38 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இதையடுத்து மீண்டும் எல்லையில் போர் மேகங்கள் படரத் தொடங்கின. இம்முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான்மக்களுக்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே போர் பயம் தலை தூக்க ஆரம்பித்தது.
இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான போர்க் கப்பல்கள் மேற்குப்பகுதிக்கு விரைந்து கட்ச் வளைகுடாவில் பாகிஸ்தானை நோக்கி நிறுத்தப்பட்டன. அணுகுண்டுகளை ஏந்திச்செல்லும் அக்னி ஏவுகணைகளும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியை நோக்கி விரைவாக அனுப்பப்பட்டன.
வெளியேறிய வெளிநாட்டினர்:
இரண்டு நாடுகளுமே அணுகுண்டுகள் வைத்திருப்பதால் போரின் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்பதால்பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்விரு நாடுகளிலும் தங்கியிருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்ப ஆரம்பித்தனர்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனைக் குழு அடிக்கடி அவசர அவசரமாகக் கூடிவிவாதித்தது.
ஆனாலும் அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா ஆகியோர் அடுத்தடுத்து டெல்லிக்கும்இஸ்லாமாபாத்துக்கும் விரைந்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போர் பதற்றம் மீண்டும்தணிந்தது.
ஆனாலும் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முழுவதுமாகத் தடுத்து நிறுத்தும் வரைஎல்லையிலிருந்து இந்தியப் படைகளை திரும்ப அழைக்க மாட்டோம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசும் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அத்வானியும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மீண்டும் காஷ்மீரில் தாக்குதல்:
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் காஷ்மீரில் வெறித் தாக்குதல்நடத்தி 28 அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
இதையடுத்து எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தீவிர போர் ஒத்திகை:
இந்நிலையில் பாகிஸ்தானின் முப்படைகளும் நேற்று (செவ்வாய்க்கிழமை) போர் ஒத்திகையைத் துவக்கியுள்ளன.
எல்லைப் பகுதிகள் முழுவதிலும் இந்தியா தன்னுடைய படைகளைக் குவித்துள்ளதால், பாகிஸ்தான் படையினர்எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அந்நாடு இந்தப்போர் ஒத்திகையை ஆரம்பித்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்கு இந்தப் போர் ஒத்திகை நீடிக்கவுள்ளது. பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரும் அந்நாட்டுமுப்படைகளின் தலைமை தளபதியுமான பர்வேஸ் முஷாரப் இந்தப் போர் ஒத்திகையை கூர்ந்து கவனித்துவருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தப் போர் ஒத்திகை மிகப் பெரிய அளவில் இருக்கும் என்றுகூறப்படுகிறது.
உஷார் நிலையில் இந்தியப் படைகள்:
இதையடுத்து எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
எந்த நேரத்திலும் எந்தவிதமான தாக்குதலையும் எதிர் கொள்வதற்குத் தயார் நிலையில் அவர்கள் இருப்பதற்காகஅவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைப்பதற்கு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
குளிர் காலம் நெருங்கி வருவதால் இந்தியப் படையினருக்கு அளிக்கப்படும் தண்ணீர் உள்ளிட்ட திரவப்பொருள்கள் அனைத்தும் -20 டிகிரி வரை வெப்பநிலை சென்றாலும் உறையாத அளவுக்குத் தயாரித்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்ய சபாவில் இன்று பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
காஷ்மீரின் லேஹ் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான ஒரு ஆய்வகத்தில்(பீல்டு ரிசர்ச் லெபாரட்டரி) இந்த திரவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பெர்னாண்டஸ் கூறினார்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்க விமானங்கள்:
இதற்கிடையே சி-130இ ரகத்தைச் சேர்ந்த ஆறு சரக்கு விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்க அமெரிக்காதிட்டமிட்டுள்ளது.
இந்த விமானங்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் விமானப் படைக்குத் தான் பயன்படப் போகின்றன.
ஆனால் இந்த விற்பனை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவு செய்யப்படவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications