ஈரோட்டில் மழை வேண்டி கழுதை திருமணம்
ஈரோடு:
ஈரோடு அருகே மழை பெய்வதற்காக 2 கழுதைகளுக்கு பொது மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாமல் வயல்கள் அனைத்தும் வறண்டு போயுள்ளன.
இதையடுத்து ஈரோட்டை அடுத்து உள்ள சின்னியம்பாளையம் என்ற கிராமத்தில், மழை பெய்வதற்காக கழுதைதிருமணம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி ஒரு ஆண் கழுதையையும் பெண் கழுதையையும் ஏற்பாடு செய்தனர் அந்தக் கிராம மக்கள்.
பின்னர் ஆண் கழுதைக்கு பரிவட்டம் கட்டி, பெண் கழுதைக்கு சேலை கட்டியும் பொட்டு வைத்தும் அலங்கரித்தனர்.
இதைத் தொடர்ந்து கெட்டி மேளம் முழங்க அந்த இரண்டு கழுதைகளுக்கும் திருமணம் நடத்தப்பட்டது.
இதையடுத்து விரைவில் தங்கள் ஊரில் மழை பெய்யும் என்று அந்தக் கிராமத்தினர் நம்புகின்றனர்.
இந்த கழுதைத் திருமணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொது மக்கள் கொண்டுவந்த தானியங்கள் மற்றும் உணவுப் பொருள்களை வைத்தே அனைவருக்கும் திருமணச் சாப்பாடும்பரிமாறப்பட்டது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications