வைகோவை பார்க்க பெர்னாண்டஸ் இன்று வேலூர் வருகை
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவைப் பார்ப்பதற்காகபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று வேலூர் வருகிறார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான பெர்னாண்டஸ் இன்று காலை டெல்லியிலிருந்துவிமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர் உடனடியாக வேலூருக்குப் புறப்பட்டார்.
அதன் பிறகு பகல் 11.45 மணிக்கு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை அவர் சந்திக்கவுள்ளார்.பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வேலூரில் பத்திரிக்கை நிருபர்களையும் பெர்னாண்டஸ் சந்திக்கிறார்.
பெர்னாண்டஸ் வருகையையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவருடையவருகை குறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டு விட்டது.
மதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஒரு தலைவர் சிறையிலிருக்கும் வைகோவைசந்திக்க வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே உள்ள திமுக மற்றும் பாமக போன்ற கட்சிகள் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் கூடஅதன் தலைவர்கள் இதுவரை வைகோவைச் சென்று பார்க்கவில்லை.
பாஜகவின் அகில இந்திய செயலாளரான இல. கணேசன் நேற்று சிறையில் உள்ள வைகோவைச் சென்று பார்த்தார்என்பது நினைவிருக்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications