வைகோ ஒரு புரட்சிவாதி: வேலூர் சிறையில் பெர்னாண்டஸ் பேட்டி
வேலூர்:
பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று வேலூர்மத்திய சிறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பெர்னாண்டஸை ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ராணுவஅதிகாரிகள் பயிற்சி மன்றத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் வேலூர் சென்றார். அங்கு மத்திய சிறையில் வைகோவைசந்தித்தார்.
அப்போது மத்திய மதிமுக அமைச்சர்களான செஞ்சி ராமச்சந்திரன், மு. கண்ணப்பன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் வெளியே வந்த பெர்னாண்டஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
பொடா சட்டத்தின் கீழ் வைகோவை தமிழக அரசு கைது செய்திருப்பது தேவையில்லாதது. வைகோ ஒரு புரட்சிவாதி. அவர் என்னபேசினார் என்பதை நானும் படித்துப் பார்த்தேன். அதில், அவர் தவறாக ஏதும் பேசிவிடவில்லை. கைது செய்யும் அளவுக்கு அவர்எதையும் கூறவில்லை.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிச்சயம் தலையிடாது. பொடா சட்டத்தை உடனடியாக திருத்தும் திட்டமும்மத்திய அரசிடம் இல்லை என்றார் பெர்னாண்டஸ்.
நேற்று வைகோவும் பா.ஜ.க. தேசியச் செயலாளர் இல. கணேசனும் சந்தித்தபோது ஒட்டு கேட்ட போலீசார் இன்று ஒதுங்கிக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சரான பெர்னாண்டசுடன் மோத தமிழக அரசு விரும்பவில்லை. இதையடுத்து இந்தச் சந்திப்புடன்சிறை அதிகாரிகள் யாரும் உடன் இருக்கவில்லை.
சுமார் 45 நிமிடங்கள் வைகோவுடன் பேசிய பெர்னாண்டஸ் பின்னர் சென்னை கிளம்பினார். பிற்பகலில் சென்னை வரும் அவர்முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்திக்கிறார். வைகோ விவகாரம் குறித்து அவர் ஜெயலலிதாவுடன் பேசுவார் என்று தெரிகிறது.
பின்னர் திமுக தலைவர் கருணாநிதியையும் சந்திக்கிறார் பெர்னாண்டஸ்.
மூன்று தினங்களுக்கு முன்பே பெர்னாண்டஸ் வேலூர் வருகிறார் என்ற செய்தியை தட்ஸ்தமிழ்.காம் வெளியிட்டிருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றக் கூட்டம், ஜனாதிபதி தேர்தலால் அவரது வருகை தாமதமடைந்ததது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications