வன்னியர் முதல்வராக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
ஆட்சி அதிகாரத்தை அனைத்து சமூகத்தினரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் வட பகுதி மாவட்டங்களைக் கொண்ட தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்என்று அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் அவர்பேசியதாவது:
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு கடந்த 1959ம் ஆண்டிலேயே வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் வட தமிழகத்திலேயே அதிகமாக வாழும் வன்னியர் சமூகத்தினரின் வாழ்வுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது.
இட ஒதுக்கீடு கேட்டுத் தான் என் தலைமையில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. நாங்கள் 21 வன்னியர்களைப்பலி கொடுத்து தான் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது.
இதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி இப்போது மத்திய அரசிலும் அங்கம்வகித்துள்ளோம்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தைஇரண்டாகப் பிரிக்க வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்,நாமக்கல், சேலம், தர்மபுரி, நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களும் சேர்ந்த தனி மாநிலம் உருவாக்கப்படவேண்டும்.
இந்த 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவர் கூட இதுவரை முதல்வராக ஆகவில்லை.
இதையடுத்து பாண்டிச்சேரியோடு சேர்ந்து இந்தியாவில் 3 தமிழ் மாநிலங்கள் இருக்கும். இதன் காரணமாகதமிழர்களுக்கு மத்திய அரசு மேலும் அதிகமான நிதியை ஒதுக்கும்.
மேலும் தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் அனைத்து மக்களுக்கும் நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்நிலையில் அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட தங்கள் கட்சியில் உள்ள வன்னியர்களை நசுக்கிவருகின்றனர். ஆனால் எந்த அரசாலும் வன்னியர்களை நசுக்க முடியாது.
இவற்றையெல்லாம் உணர்ந்து இந்தக் கட்சிகளில் உள்ள வன்னியர்கள் அனைவரும் என்னுடைய முயற்சிக்குஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மஞ்சள் சட்டை அணிந்த 25 இளைஞர்களை என்னிடம் அனுப்புங்கள்.அடுத்தமுறை வன்னியர் ஒருவரை முதல்வராக்கிக் காட்டுகிறேன் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications