இந்தியாவில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
டெல்லி:
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா கடந்த 7 மாதங்களில் 3வது முறையாக டெல்லி வந்துசேர்ந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதிலிருந்துஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதற்றம் தலை தூக்கியது.
எல்லைப் பகுதிகளில் இந்தியா தன் படைகளைக் குவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துஅமைச்சர்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வந்து பேச்சு நடத்தி பதற்றத்தைக் குறைத்தனர்.
இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமையும் பயணிகள் பஸ்சையும் பாகிஸ்தான்தீவிரவாதிகள் தாக்கி 38 பேரைக் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
எந்த நேரத்திலும் போர் வரலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் தெற்கு ஆசியாவிற்கு வந்தஅமெரிக்க, இங்கிலாந்து தலைவர்கள் மீண்டும் அமைதியை ஏற்படுத்த முயற்சித்தனர். அமெரிக்கவெளியுறவுத்துறை இணை அமைச்சரான ரிச்சர்டு ஆர்மிடேஜ் வந்து சென்றவுடன் பதற்றம் தணிந்தது.
ஆனாலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வது வரை எல்லையிலிருந்துபடைகளை வாபஸ் பெறப் போவதில்லை என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்தொடர்ந்து கூறி வருகிறார்.
எல்லை தாண்டி காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ மாட்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு மட்டுமே அவ்வப்போதுபாகிஸ்தான் கூறி வந்தது. ஆனாலும் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவிய வண்ணம்தான் உள்ளனர்.
கடந்த 13ம் தேதி காஷ்மீரில் 28 அப்பாவிப் பொது மக்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் துடிதுடிக்கச் சுட்டுக்கொன்றனர். மேலும் இன்று காலை தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இடையூறு விளைவிக்கவும் அவர்கள்திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஜாக் ஸ்டிரா இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்த அவர் இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் பாதுகாப்புத்துறை ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி ஏற்படுத்தும் வகையில் அவர் மேலும் சில இந்தியத்தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டிருக்கின்றனர் என்றும்அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இதைத் தடுக்க போதுமான முயற்சிகள் எதையும்எடுக்கவில்லை என்றும் ஸ்டிராவிடம் இந்தியத் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.
எல்லையில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் பலி:
இதற்கிடையே இன்று அதிகாலை காஷ்மீரில் ஊடுருவிய 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர்சுட்டுக் கொன்றனர்.
கூப்வாரா மாவட்டத்தில் நவ்காம் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவுக்குள்இந்த ஐந்து தீவிரவாதிகளும் நுழைந்து கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்து விட்ட இந்திய ராணுவத்தினர் அவர்களை உடனடியாகச் சரணடைந்து விடுமாறு கூறினர். ஆனால்அதற்குப் பதிலாக ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதல் நடத்தியதில் ஐந்து தீவிரவாதிகளும் குண்டு பாய்ந்துஉயிரிழந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications