இந்தியர்களிடம் விசா கெடுபிடி செய்யும் பங்களாதேஷ்
டாக்கா:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் இம்மாத இறுதியில் டாக்கா வருவதையொட்டி,பங்களாதேஷ் வரும் இந்தியர்களுக்குப் பலவிதமான விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சார்க் நாடுகள் அமைப்பின் தலைவருமான முஷாரப் வரும் 29ம் தேதி பங்களாதேஷ் செல்லவுள்ளார்.
இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு பங்களாதேஷுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு விசா கொடுக்கஅந்நாட்டுத் தூதரகம் மறுத்து விட்டதாகச் செய்திகள் வந்தன.
ஆனால் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் இந்தச் செய்திகளை மறுத்துள்ளார்.
பங்களாதேஷ் வரும் இந்தியர்களுக்கு விசா அளிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவ்வாறுவிசா அளிக்கப்படுவதில் சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பங்களாதேஷ் பிரதமராக பேகம் கலிதா ஜியா பதவியேற்ற பிறகு அங்கு முஷாரப் செல்வது இதுவே முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.
பாக். தொடர்ந்து தடை:
இதற்கிடையே பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதிக்கும் திட்டம் ஏதும் எங்களுக்குஇல்லை என அந் நாடு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹமீத் நவாஸ் கான் கராச்சியில் இதைத்தெரிவித்தார்.
இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு கடந்த ஜனவரி 1ம் தேதி விதிக்கப்பட்ட தடை கடந்தஜூன் 9ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் வரும் 29ம் தேதி பங்களாதேஷ் செல்லும் முஷாரப் இந்திய வான் பகுதியைப் பயன்படுத்த மாட்டார்என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமது கான் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications