அமெரிக்காவில் வாழும் இந்தியர்களே!
சிலிக்கன் வேலி:
அமெரிக்காவில் வாழும் பிற நாட்டினர் தங்களது முகவரி மாறியிருந்தால் அதை 10 நாட்களுக்குள் சட்டத்துறையிடம் தெரிவிக்கவேண்டும் என்ற விதி அமலாக்கப்பட உளளது.
இந்த விதி 2 மாதங்களில் அமலாகும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிற நாட்டினர் மீதான தனது கெடுபிடியைஅந் நாடு அதிகப்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி அந்த நாட்டுக்குள் நுழையும்போது ஒருவர் கொடுத்த முகவரி பின்னர்மாறியிருந்தால் அதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இதைச் செய்யத் தவறுபவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. முகவரி மாற்றத்தைத் தெரிவிக்காதபிற நாட்டினருக்கு 200 டாலர் அபராதம், 30 நாள் சிறைவாசம், தேவைப்பட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்றநடவடிக்கைகளை அந் நாடு எடுக்கவுள்ளது. இது கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் பொறுந்தும்.
இது குறித்து அந் நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஜான் அஸ்க்ராப்ட் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கர்அல்லாதவர்களை எளிதில் கண்காணிக்க முடியும். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இது மிக அவசியமாகிறது என்றார்.
முகவரி மாறுவோர் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்ற விதி நீண்டகாலமாகவே அமலில் உள்ளது. ஆனால், இதை யாரும்பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இந்த விதியை அமல்படுத்துவதில் அமெரிக்க அதிகாரிகளும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. ஆனால், இப்போது இந்த விதியை தீவிரமாக அமலாக்க அந் நாடு முடிவு செய்துள்ளது.
இந்த விதி அமெரிக்காவில் வசிக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிற நாட்டினருக்கும் பொறுந்தும். இப்போது அந்நாட்டில் 1.10 கோடி அன்னிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.
அமெரிக்கக் குடியுரிமைப் பிரிவு (Immigration and Naturalization Service -INS)இதனை அமலாக்கும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications