காஞ்சி சங்கராச்சாரியாரின் 68வது ஜெயந்தி விழா
காஞ்சிபுரம்:
காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளின் 68வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் இன்று தொடங்கின.
இதையொட்டி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகளும் இன்று காலை காஞ்சிபுரத்திலுள்ளபுகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு 130 தங்க நாணயங்களுடன் "கனகாபிஷேகம்"செய்தனர்.
பின்னர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்வதற்குப் பயன்படுவதற்காக 660 கிராம் எடை கொண்ட ஒரு தங்கக்குடத்தையும் அந்தக் கோவிலுக்கு ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் பரிசாக அளித்தார்.
அந்தக் கோவிலில் உள்ள லட்சுமி மற்றும் சரஸ்வதி சிலைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான கிரீடம்சூட்டப்பட்டது. பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற காஞ்சி சுவாமிகள் அங்கு கடவுளை வழிபட்டார்.
காஞ்சி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கர பக்த ஜனசபா சார்பில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தஹோம நிகழ்ச்சிகளும் "சகஸ்ரகலச அபிஷேக" நிகழ்ச்சிகளும் இன்று காலை முடிவடைந்தன.
ஜெயலலிதா நாளை காஞ்சி வருகை:
இதற்கிடையே நாளை காஞ்சிபுரம் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் காஞ்சி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெறவுள்ளார் என்று காஞ்சிபுரம் மடத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான பன்னீர்செல்வம், இந்துஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சுபாஷ் மஹாரியாஆகியோர் இன்று காஞ்சிபுரம் மடத்திற்குச் சென்று சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications